தமிழக தொழிலாளிகள் கொல்லப்பட்ட சம்பவம் – நீதிவிசாரணை கேட்டு 13ல் பாமக போராட்டம்
ஹைதராபாத்: ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணை கோரி 13ஆம் தேதி பா.ம.க போராட்டம் நடக்க இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கட்டிட வேலைக்கு சென்ற அப்பாவி தமிழர்கள் 20 பேரை அம்மாநிலக் காவல்துறையினர் கடத்திச் சென்று காட்டில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஆந்திரக் காவல்துறை சார்பில் அளிக்கப்படும் விளக்கம் ஏற்க முடியாததாகும். இதுகுறித்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றமும் காவல்துறையின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.
அப்பாவித் தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதால் இதுகுறித்த உண்மைகளை ஆந்திரக் காவல்துறை மூடி மறைக்கவே முயலும். எனவே, இந்த படுகொலைகளின் பின்னணியில் ஒளிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டுமானால் இதுகுறித்து பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது மத்திய புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரணை நடத்துவதே சரியானதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இருமாநில அரசுகளும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications