சுற்றுலா போன தம்பதி.. பெண்ணை தாக்கி தரதரவென இழுத்துச் சென்று.. கணவர் கண் முன் நடந்த கொடூரம்
போபால்: மத்தியப்பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதியினர் சுற்றுலா சென்ற நிலையில், புதுமணத் தம்பதியைத் தாக்கி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இவர்கள் இருவரும் பைரவ பாபா கோயிலுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியன்று சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அந்தப் பகுதியில் மதுபோதையில் இருந்த 8 பேர் அந்த தம்பதியினரை சூழ்ந்துள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் அச்சமடைந்துள்ளனர்.

அப்போது, மதுபோதையில் இருந்தவர்கள் சிலர் அப்பெண்ணின் கணவரைப் பிடித்து வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தபோதும் பலரும் சேர்ந்து பிடித்ததால் அவரால் பிடியில் இருந்து விலக முடியவில்லை. இதையடுத்து, கணவர் கண் முன்னேயே அந்தப் பெண்ணை சில நபர்கள் பிடித்து தாக்கி தரதரவென்று சிறிது தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தபோது அச்சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளனர். மேலும். இந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் புகார் தெரிவித்தால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மானத்தை வாங்கி விடுவோம் என்று கூறியும் மிரட்டியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்த நிலையில் வீடியோவை வெளியிட்டு விடுவார்கள் என்று பயந்து அச்சம்பவம் குறித்து முதலில் போலீஸாரிடம் புகார் தெரிவிக்காமலேயே இருந்துள்ளனர். பின்னர், அக்டோபர் 23 ஆம் தேதியன்று காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். திருமணமான புதுத் தம்பதியினர் சுற்றுலா சென்ற நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications