For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"டிரஸை கழட்டு.." பள்ளியில் எல்லை மீறிய டீச்சர்! மாணவி எடுத்த விபரீத முடிவு.. ஆசிரியர் போக்சோவில் கைது

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஆசிரியர் செய்த செயலால் மாணவி எடுத்த விபரீத முடிவு ஒட்டுமொத்த மாநிலத்தையே அதிரச் செய்வதாக அமைந்து உள்ளது.

ஆசிரியர்கள் என்பவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானவர்கள். இதன் காரணமாகத் தாய், தந்தைக்குப் பின் ஒருவருக்கு ஆசிரியரே முக்கியம் என்கிறார்கள்.

பல சாதனைகளைப் படைத்தவர்களும் தாங்கள் வாழ்க்கையில் ஆசிரியர்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவே கூறி உள்ளனர். ஏனென்றால் மாணவர்களைச் செதுக்குபவர்களே ஆசிரியர்கள் தான்.

ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை.. தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்.. ஜிகே வாசன் சர்ச்சை பேச்சு ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை.. தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்.. ஜிகே வாசன் சர்ச்சை பேச்சு

 ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு ஒரு பாடம் பிடிப்பதற்கும் சரி, பிடிக்காமல் போவதற்கும் சரி ஆசிரியர்களே முக்கிய காரணமாக உள்ளனர். இப்போதும் கூட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் மாணவர்களைச் சிறப்பாக வழிநடத்துகின்றனர். பணியிட மாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களை விடாமல் அழுது அடம் பிடிக்கும் மாணவர்களின் நிகழ்வுகளும் கூட தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடக்கவே செய்கிறது.

 ஜார்கண்ட்

ஜார்கண்ட்

ஆனால் துரதிருஷ்டவசமாக அனைத்து ஆசிரியர்களும் இதுபோல இருப்பதில்லை. சில ஆசிரியர்களின் மோசமான நடவடிக்கையால் மாணவர்களின் எதிர்காலமே சீரழிகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. அங்கு ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜம்சேத்பூரில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்றது.

டிரஸ்ஸஸை கழட்டு

டிரஸ்ஸஸை கழட்டு

அங்குள்ள பள்ளி ஒன்றில் தேர்வில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் முறைகேடு செய்வதாக ஆசிரியருக்குச் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அந்த மாணவி பிட் எடுத்து வந்து அடிப்பதாக அந்த ஆசிரியருக்குச் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதை அவர் வேறு வகையில் சோதனை செய்து இருக்கலாம். மாறாக எல்லை மீறி சென்று அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆடையைக் கழற்ற வைத்து அந்த ஆசிரியர் சோதனையிட்டு இருக்கிறார்.

 தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இதன் காரணமாக மனம் நோந்துபோன அந்த மாணவி வீட்டிற்கு வந்ததும் தீக்குளித்து உள்ளார். இதைப் பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இப்போது அவர் மிகவும் இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

மாணவி தனது சீருடையில் பிட் பேப்பர்களை எடுத்துச் சென்று இருக்கலாம் என்று ஆசிரியர் சந்தேகித்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகத் தனது வாக்குமூலத்தில் மாணவி தெரிவித்துள்ளார். தான் மறுத்த போதிலும், பக்கத்து அறைக்குக் கூட்டிச் சென்று தனது ஆடைகளைக் கழற்றி சோதனை செய்ததாகவும் அந்த மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.

கைது

கைது

இது தொடர்பாக விசாரணையை நடத்திய போலீசார், சம்மந்தப்பட்ட ஆசிரியர் சந்திரா தாஸை கைது செய்து உள்ளனர். அவர் மீது ஐபிசி மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் போலலீசார் தெரிவித்தார். அந்த மாணவி தலித் சமூகத்தை சேர்ந்த மாணவி என்று கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

 உதவி எண்கள்

உதவி எண்கள்

எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050

ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

English summary
Teacher forced girl student to remove her clothes suspecting cheating: Girl attempts suicide after Teacher asked to removes dress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X