என்னா துணிச்சல்?! தப்பா பேசினால் நாக்கை அறுப்பேன்.. எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை!

போலீசை தவறாக பேசினால் நாக்கை அறுப்பேன் என எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போலீசை தவறாக பேசினால் நாக்கை அறுப்பேன் என எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல்வாதிகள் காவல்துறையினரை சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகிறார்கள். ஐபிஎஸ் படித்து பணிக்கு வந்துள்ளார்கள், இரவு பகல் என்றுகூட பணி செய்கிறார்கள் என்ற எண்ணம் கொஞ்சமும் இன்றி தங்கள் வீட்டு வேலைக்காரர்களை போல் நடத்துகிறார்கள்.

போட்டிருக்கும் காக்கி யூனிஃபார்முக்கு கூட மதிப்பளிக்காமல் கடும் சொற்களால் இழிவுபடுத்தி வருவதும் கொலை மிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஷு வை துடைக்க சொல்வது போன்ற வேலைகளிலும் போலீஸ்காரர்களை ஈடுபடுத்துவதோடு காவல் துறையை தங்களின் ஏவல்துறையாக பயன்படுத்தி வருகின்றனர் சில அரசியல்வாதிகள்.

இன்ஸ்பெக்டர் மாதவ்

இன்ஸ்பெக்டர் மாதவ்

இந்நிலையில் அரசியல்வாதிகளை மிரட்டும் வகையில் கொதித்தெழுந்துள்ளார் போலீஸ்காரர் ஒருவர். ஆந்திராவை சேர்ந்தவர் மாதவ். இவர் ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் உள்ள கதிரி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

ஓட்டம் பிடித்த போலீஸ்

ஓட்டம் பிடித்த போலீஸ்

இந்நிலையில் தடிபத்ரி பகுதியில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற காவல்துறையினர் குறைந்த அளவில் இருந்ததால் கூட்டத்தினரிடமிருந்து தப்ப ஓட்டம் பிடித்தனர்.

திருநங்கைகள் போல்

திருநங்கைகள் போல்

இதுகுறித்து விமர்சித்த தெலுங்கு தேசம் எம்பி திவாகர் ரெட்டி, போலீசார் கலவரத்தை அடக்குவார்கள் என்ற பார்த்தால் திருநங்கைகளை போல் ஓடி ஒளிந்து கொண்டனரே என விமர்சித்தார். அவரது விமர்சனத்திற்கு எந்த காவல்துறை அதிகாரியும் வாய் திறக்காமல் இருந்தனர்.

நாக்கை அறுத்துவிடுவேன்

நாக்கை அறுத்துவிடுவேன்

எம்பியின் பேச்சால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் மாதவ், நேற்று மாலை பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்தார். அப்போது பேசிய அவர் எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. யாராவது போலீஸ்காரர்களை வரம்பு மீறி பேசினால் இனியும் பொறுமையாக இருக்க முடியாது. நாக்கை அறுத்துவிடுவேன். ஜாக்கிரதையாக பேசுங்கள் என்றார்.

முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை

முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை

தற்போதைய எம்எல்ஏ எம்பியாக இருந்தாலும் சரி முன்னாள் எம்எல்ஏ எம்பியாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் இதுதான் என்ற அவர் போலீசாரை அரசியல்வாதிகள் இதுபோல் பேசுவதால் மனைவி மற்றும் குழந்தைகள் முகத்தைக்கூட பார்க்கமுடியவில்லை என்றும் மாதவ் கூறினார்.

யூனிஃபார்மை கழட்டிட்டு வா

யூனிஃபார்மை கழட்டிட்டு வா

இன்ஸ்பெக்டரின் எச்சரிக்கையால் எம்பி திவாகர் ரெட்டிக்கு பிபி எகிறியது. உடனடியாக ரியாக்ட் செய்தார் எம்பி. நாக்கை வெட்டு, அதற்கு எங்கு வரவேண்டும் என சவால்விட்டார். உன் வீட்டிற்கு வரவேண்டுமா? போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டுமா? நீ பிறந்த கிராமத்திற்கு வரவேண்டுமா? இல்லை அனந்தபுரமு டவர் சென்டருக்கு வரவேண்டுமா? நான் எங்கு வர வேண்டும் என சொல். யூனிஃபார்மை கழட்டி வைத்துவிட்டு வா என்று மிரட்டினார்.

எம்பி இன்ஸ்பெக்டர் மீது புகார்

எம்பி இன்ஸ்பெக்டர் மீது புகார்

மேலும் இன்ஸ்பெக்டர் மாதவ் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் எம்பி திவாகர் ரெட்டி போலீஸில் புகார் அளித்துள்ளார். எம்பி எம்எல்ஏக்களுக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் நாக்கை அறுப்பேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் ஆந்திராவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+