கடைக்கு வெளியே நிறுத்தியதால் அபராதம் விதித்த போலீஸ்.. ஆத்திரத்தில் ஆட்டோவை எரித்த ஓட்டுநர்.. வீடியோ
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த ஒட்டுநர், திடீரென தனது ஆட்டோவிற்கு தீ வைத்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அதற்கும் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்ததாக ஓட்டுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் உணர்வுகள் ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஆத்திரத்தில் தன்னிலை மறந்து செயல்படுவதுடன், போலீஸ் அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசுவது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வது , ரூல்ஸ் பேசுவது போன்றவை இயல்பாக நடக்கிறது. நன்றாக குடித்துவிட்டு சனிக்கிழமை இரவு சென்னையில் முக்கிய பகுதிகளில் சென்று மாட்டினால் எப்படி இருக்கும்... இதுபோன்ற சூழல்களை பலர் சந்தித்திருப்பார்கள்.

அதேபோல் பக்கத்து தெரு தானே என்று ஹெல்மெட் போடாமல் அழுக்கு லுங்கியுடன் பெட்ரோல் போட போகும் போது போலீசிடம் மாட்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.. இதேபோல் ஞாயிறுகளில் ஆசை ஆசையாக குடும்பத்துடன் மால்களுக்கு ஷாப்பிங் செல்லும் போது, 40 ரூபாய் பார்க்கிங் காசு கொடுக்க வேண்டுமா எனறு யோசித்து, வெளியில் நிறுத்திவிட்டு செல்வார்கள். ஆனால் அந்த நேரம் அங்குவரும் போலீசார் வண்டியை டோவ் போட்டு தூக்கிவிடுவார்கள். அவர்களிடம் போராடி வண்டியை மீட்பதற்கு அபராதம் கட்ட வேண்டிய நிலையும் பலருக்கு வந்திருக்கும்.
இதேபோல் அதே ஞாயிறுகளில் வெளியில் செல்லும் போது, பின்னால் உட்காருபவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டியவர்களும் அதிகமாக உள்ளனர். அதேபோல் வாகனத்தை நோ பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று வந்தவர்களும் அபராதம் செலுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. சில நேரங்களில் விதிமீறலில் சிக்கிய வாகன ஓட்டிகள், கோபத்தில் போலீஸ் கண் முன்னே வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்.
उत्तर प्रदेश : जिला बुलंदशहर में दुकान के बाहर खड़े टेंपो का पुलिस ने चालान काट दिया। गुस्साए युवक ने अपने टेंपो में आग लगा दी।
— Sachin Gupta (@SachinGuptaUP) August 20, 2024
पुलिस के अनुसार– टेंपो सड़क पर खड़ा होने से ट्रैफिक बाधित हो रहा था। pic.twitter.com/3F5VHkc8cC
அப்படித்தான் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் கடைக்கு வெளியே மினி டோர் ஆட்டோ வாகனத்தை நிறுத்தினார். அவருக்கு போலீசார் அபராதம் விதித்து சலான் கொடுத்தனர். ஆனால் கடை முன்புதான் நிறுத்தியாக ஆட்டோ ஓட்டுநர் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் போலீசார் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை.. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தனது மினி டோர் ஆட்டோவிற்கு ஆவேசத்துடன் தீ வைத்து எரித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அதற்கும் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே சாலையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது என்றும் அதனாலேயே அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதே சமயம், தன்னை பழிவாங்குவதற்காக தனது ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்தனர் என்று ஆட்டோ ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications