சிஏஏ போராட்டம்.. பொது சொத்து சேதமானால் இழப்பீடு தரணும்! அசாம் எதிர்க்கட்சிகளுக்கு போலீஸ் நோட்டீஸ்
திஸ்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அசாம் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டத்தின்போது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான தொகை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என அம்மாநில போலீசார் நோட்டீஸ் விடுத்திருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டமானது (சிஏஏ) மசோதாவாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கான சட்ட விதிகள் கடந்த ஆண்டு வரை இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு சட்டவிதிகள் இறுதி செய்யப்படாததால் இந்த சட்டம் செயலற்று கிடந்தது.

ஆனால், சமீபத்தில் இதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் சட்டம் அமலாக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் கடந்த 2014ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சமடைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, பார்சி, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் ஜெயின் போன்ற மதத்தினை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
ஆனால், இதில் இலங்கை தமிழர்கள் குறித்தோ அல்லது இஸ்லாமியர்கள் குறித்தோ எவ்விதமான உறுதி மொழியும் கொடுக்கப்படவில்லை. இதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து 2009ம் ஆண்டிலிருந்தே ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்திருக்கின்றனர்.
இவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சிஏஏ சட்டத்தில் இது குறித்து எதுவும் பேசப்படாமல் இருப்பது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதேபோல, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகள் குறித்தும் இந்த சட்டம் எதுவும் பேசவில்லை. எனவே இது பாரபட்சமான சட்டம் என்றும், இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பாவிக்கும் சட்டம் என்றும் அம்மதத்தை சேர்ந்த மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீவிரமான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இன்று அம்மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு எதிராக அம்மாநில காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அதாவது போராட்டத்தில் பொது சொத்துக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications