ஒரே ஒரு செல்ஃபி.. போலீஸ் அதிகாரியின் வேலைக்கு ‘வேட்டு’ வைத்த குடும்பத்தினர்.. என்ன கொடும சார்!?

Subscribe to Oneindia Tamil

உன்னாவ்: மனைவி, குழந்தைகள் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபியால், போலீஸ் அதிகாரியின் வேலைக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. பேட்டா முஜாவர் காவல் நிலைய பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பணக் கட்டுகளை பரப்பி வைத்து அத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த செல்ஃபியை அவரது மனைவி சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அது உடனே தீயாகப் பரவியது.

Police officer faces probe after his wife and children show off bundle of money on social media

காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினர் பல லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து அதனுடன் செல்பி எடுத்ததால், அது லஞ்சப் பணமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 14 லட்சம் மதிப்பிலான பணக்குவியலுடன் செல்பி எடுத்து அதை வெளியிட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Police officer faces probe after his wife and children show off bundle of money on social media

இந்த நிலையில், இது தொடர்பாக காவல்துறை எஸ்.பி சித்தார்த் சங்கர் மீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி ரமேஷ் சந்திர சஹானியை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படம் அவரது குடும்ப சொத்தை விற்று கிடைத்த பணத்துடன் 2021ல் எடுக்கப்பட்டது என விசாரணையில் ரமேஷ் சந்திர சஹானி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+