கேரளாவில் 5 ஸ்டார் ஹோட்டல் போதை பார்ட்டியில் போலீசார் ரெய்டு: ரஷ்யர் உள்பட 7 பேர் கைது
கொச்சி: கேரளாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இரவு பார்ட்டியின்போது போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரஷ்யர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரவு பார்ட்டி நடந்துள்ளது. அந்த பார்ட்டியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். பார்ட்டிக்கு வந்தவர்கள் மது அருந்தி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை நடத்தி ரஷ்யாவைச் சேர்ந்த வாசிலி மார்கெலோவ்(37) என்கிற சைகோவ்ஸ்கி உள்பட 7 பேரை கைது செய்தனர்.
வாசிலி வைத்திருந்த பவுடரை வாங்கி சோதனை செய்தபோது அதில் போதைப் பொருள் கலந்திருப்பது தெரிய வந்தது. பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருள் உட்கொண்டனரா என்று சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஏ.பி. விபின் கூறுகையில்,
5 நட்சத்திர ஹோட்டலில் இருந்து போதைப் பொருள் வைத்திருந்த 7 பேரை கைது செய்துள்ளோம். அதில் ஒருவர் ரஷ்யர். அவர்களை கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications