நடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்த போலீசார்... காற்றில் பறந்த கரன்சி
வாரணாசி : உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடனப் பெண்கள் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் மீது பணத்தை வாரி இறைத்து போலீசாரும் சேர்ந்து நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசி நகரில் உள்ள மதுபான விடுதியில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கூடியிருக்க, நடனப் பெண்கள் இந்தி பாடல்களுக்கு வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்தனர்.

அதனைப் பார்த்து கொண்டிருந்த சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், நடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
இதனைப் பார்த்த பிறகு அங்கிருந்த போலீசாரும், ஒருவர் பின் ஒருவராக போட்டி போட்டு கொண்டு வந்து, பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்தனர். அப்போது நடனம் ஆடிய பெண்கள், போலீசாரை வளைத்து நின்று ஆட்டம் போட்டனர். அவர்களின் அசைவுக்கு ஏற்ப போலீசாரும், நடனம் ஆடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications