அமித் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்.. ஆனால் உங்கள் தாய்.. 2 வயது குழந்தையை கொன்று தற்கொலை செய்த தாய்
புணே: மாமியார் கொடுமை தாள முடியாமல் தனது 2 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புணே ஹடப்சர் போலீஸ் காலனியை சேர்ந்தவர் அமித் காம்ளே. இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜான்வி (22). இவர்களுக்கு ஷிவான்ஸ் என்ற 2 வயது மகன் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கணவர் வேலைக்கு சென்ற பின்னர் ஜான்வி திடீரென தனது மகன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஜான்வி எழுதிய தற்கொலை கடித்ம சிக்கியது. அதில் அமித் நீங்கள் என்னை அதிகம் நேசிக்கிறீர்கள். ஆனால் உங்கள் தாய் சுஜாதாவால் வாழ்க்கையில் நான் வெறுப்படைந்துவிட்டேன்.
அவர் என்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார். எனவே எனக்கு வாழ பிடிக்கவில்லை என உருக்கமாக ஜான்வி கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications