காஷ்மீரில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்: காவலர் ஒருவர் பலி; இருவர் காயம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியாகியதாகவும், இருவர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஜம்னகிரி போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் போலீசார் ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர் போலீஸ், மற்றொருவர் அப்பகுதியை சேர்ந்தவர். காவல்நிலையத்தில் இருந்து ஆயுதங்களை பயங்கரவாதிகள் திருட வந்திருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஜாவிட் கிலானி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் போலீசார் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் கலவரம் வெடித்தது.
போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 83 பேர் உயிர் இழந்தனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்ததால் 70 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பதற்றம் தணிந்து இயல்புநிலை திரும்பியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications