டெல்லி அருகே வெளிநாட்டு பெண் பலாத்காரம்: டாக்சி டிரைவர் தலைமறைவு
மதுரா: டெல்லி அருகே போலந்து நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான டாக்சி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலந்து நாட்டைச் சேர்ந்த சுமார் 35 வயது பெண் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார்.
‘‘ஹரே கிருஷ்ணா'' இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதால் அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆக்ரா - டெல்லி அருகே உள்ள மதுரா நகரில் தங்கி இருந்தார்.
திருமணமாகிவிட்ட அவருக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. மதுராவில் சிறிய துணிக்கடை ஒன்றை நடத்தி வரும் இவர் வைத்துள்ளார். வெளிநாடுகளுக்கு துணி ஏற்றுமதியும் செய்து வருகிறார்.
இதற்காக அவர் அடிக்கடி மதுராவில் இருந்து டெல்லி சென்று வருவதுண்டு. நேற்று முன்தினம் மாலை அவர் தன் மகளுடன் டெல்லி செல்ல யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார். பஸ் வராததால் வாடகை டாக்சிகளை நிறுத்தி அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெரிய வெள்ளை நிற கார் அவர் அருகில் வந்து நின்றது. கார் டிரைவர் அவரிடம், ‘‘எங்கு செல்ல வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு அந்த பெண் ‘‘டெல்லிக்கு'' என்று கூறினார்.
அடுத்த விநாடி கார் டிரைவர், அந்த பெண்ணை காருக்குள் பிடித்து இழுத்தார். உதவி கோரி அந்த பெண் அலறினார். ஆனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த வெளிநாட்டுப் பெண்ணை டிரைவர் கடத்திச் சென்றார்.
வழியில் அந்த பெண் கடும் கூச்சல் போடவே டாக்சி டிரைவர் பெரிய கத்தியை எடுத்து, குத்தி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் அமைதியாகி விட்டார்.
பிறகு திடீரென டாக்சி டிரைவர் ஒரு பாட்டிலில் இருந்த மயக்க மருந்தை எடுத்து வெளிநாட்டு பெண் முகம் மீது ‘ஸ்பிரே' அடித்தார். இதனால் அந்த பெண்ணும், அவரது மகளும் மயக்கம் அடைந்தனர்.
இரவில் மதுரா - டெல்லி இடையில் உள்ள சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு, வெளிநாட்டு பெண்ணை டாக்சி டிரைவர் பலாத்காரம் செய்தார். வெளிநாட்டு பெண் மயங்கிய நிலையில் நடந்த பாலியல் பலாத்காரம் இரவு முழுக்க நீடித்துள்ளது.
பிறகு சனிக்கிழமை அதிகாலை டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையம் ரோட்டோரம் வெளிநாட்டு பெண்ணையும், அவரது மகளையும் தள்ளி விட்டு விட்டு, டாக்சி டிரைவர் சென்று விட்டான். காலை 8 மணிக்கு பிறகே அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் அந்த பெண் டெல்லி பகர்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை டாக்டர்கள் உறுதி படுத்தினார்கள்.
அவர் உடலில் பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே 2 பேர் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பலாத்காரத்திற்குள்ளான பெண், டாக்சி டிரைவரை நன்றாக பார்த்துள்ளார். ஆனால், கார் நம்பரை குறித்துக் கொள்ள தவறிவிட்டார். என்றாலும் வெள்ளை நிற கார் என்ற அடையாளத்தை மட்டும் கூறினார்.
எனவே, அந்த கார் டெல்லி - ஆக்ரா இடையே உள்ள டோல் கேட்டை கடந்த காமிரா காட்சியை ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் மூலம் அந்த டாக்சி டிரைவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது.
பகர்கஞ்ச் போலீசாரும், மதுரா போலீசாரும் ஒருங்கிணைந்து அந்த டாக்சி டிரைவரை தேடி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications