கோவிந்தா.. கோவிந்தாவா? கதறும் பாஜக..ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிதானாம்.. புது சர்வே ரிசல்ட் இது!
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்து காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்கிறது Political Critic கருத்து கணிப்பு.
மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள்.

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள் ஆளும் பாஜக அரசு ஆட்சியை இழக்கும் என்றே தெரிவித்துள்ளன. ஏபிபி - சிவோட்டர் கருத்து கணிப்பு ஜூன் மாதம் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 106 முதல் 118; காங்கிரஸ் 108 முதல் 120 இடங்களை கைப்பற்றலாம்; தொங்கு சட்டசபைக்கும் சாத்தியம் என தெரிவித்தது. ஆனால் அக்டோபர் மாதம் இந்நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 104 முதல் 116 இடங்களும் காங்கிரஸுக்கு 113 முதல் 125 இடங்களும் கிடைக்கும்; காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு அதிகம் என்றது. இதேபோல பல்வேறு கருத்து கணிப்புகளும் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் என்றே தெரிவித்து வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது Political Critic கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கு 90 முதல் 100 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 125 முதல் 135 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் கிடைக்குமாம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்தான் அதிக இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களும் பாஜகவுக்கு 109 இடங்களும் கிடைத்தன. இதர கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸின் கமல்நாத் முதல்வராக பதவி வகித்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு கமல்நாத் ஆட்சியை கவிழ்த்தது பாஜக. இதனால் ம.பி. சட்டசபையில் பாஜகவின் பலம் 128 ஆகவும் காங்கிரஸின் பலம் 98 ஆகவும் குறைந்தது.
இந்த தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அசத்தலான வாக்குறுதிகளை வீசி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்துக்காக தனியாக ஒரு ஐபிஎல் அணி உருவாக்கப்படும்; ரூ25 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்; ரூ10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்; ரூ 2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்; பெண்களுக்கு மாதம் ரூ1,500 உதவித் தொகை வழங்கப்படும்;
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை ரூ500க்கு விற்பனை செய்யப்படும்; மாணவ மாணவியருக்கான பள்ளி கல்வி இலவசமாக வழங்கப்படும்;
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்; வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ1,500 முதல் ரூ3,000 வரை வழங்கப்படும்;100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்; நெல் குவிண்டால் கொள்முதல் விலை ரூ2,500; கோதுமை குவிண்டால் கொள்முதல் விலை ரூ2,600 என வழங்கப்படும்; அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு - ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும்; மத்திய பிரதேசத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பவை காங்கிரஸின் வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகள் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதையே தேர்தல் கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் நீண்டகால ஆட்சி மீதான யதார்த்த அதிருப்தி அலை இந்த முறை காங்கிரஸுக்கு சாதகமாக அமையும் என்பதும் கருத்து கணிப்புகளின் முடிவுகள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications