பாஜக மாண்டது மாண்டதுதான்.. உயிர்த்தெழாதோ? சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி- சர்வே ரிசல்ட்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறது Political Critic நிறுவனத்தின் கருத்து கணிப்பு.
90 சட்டசபை தொகுதிகளைக் கண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும். இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள்.

2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பாஜக வெறும் 14 இடங்களிலும்தான் வென்றது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் அசைக்க முடியாத ஆட்சியை 5 ஆண்டுகாலம் நடத்தினார் முதல்வர் பூபேஷ் பாகல். சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி மோதல் இருந்தது. ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் டெல்லி மேலிடம் தலையிட்டு இந்த பூசல்களை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகளைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு சாதகமாகத்தான் இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் பாஜகவுக்கு இதுவரை ஆறுதலான முடிவுகள் வரவும் இல்லை.

இந்த பின்னணியில் Political Critic நிறுவனம், சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இக்கருத்து கணிப்பில், ஆளும் காங்கிரஸ் கட்சி 55 முதல் 60 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவால் 27 முதல் 32 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியும் என்கிறது இக்கருத்து கணிப்பு. இதர கட்சிகள் 2 முதல் 5 இடங்களில் வெல்லும் சாத்தியம் உள்ளதாம்.
சத்தீஸ்கரில் இடைவிடாத காங்கிரஸ் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள் அம்மாநிலத்தில் கருத்து கணிப்பு முடிவுகளை உறுதி செய்வதாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று சத்தீஸ்கரில் பிரசாரம் செய்கையில் மழலையர் வகுப்பு முதல் முதுகலை வகுப்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் இலவசமாக கல்வி வழங்கப்படும் என அறிவித்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பழங்குடியினரை கவரும் வகையில் டெண்டு இலை பறிப்போருக்கு மாதம் ரூ4,000 வழங்கப்படும் என்கிற ராகுலின் அறிவிப்பு மிகப் பெரும் ஆதரவு அலையை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications