For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவா தேர்தல்: களைகட்டும் ஜாதி அரசியல்.. பண்டாரிகளுக்கு ஓடி ஓடி முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள்

Google Oneindia Tamil News

பானஜி : கோவா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பண்டாரி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாகவும், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.

கோவா உத்தர பிரதேசம் பஞ்சாப் மணிப்பூர் உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் நிறைவடைந்த நிலையில் அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

கோவா சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கோவா தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பாஜக உயர்ந்து வரும் நிலையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப்பில் தொங்கு சட்டசபைதான்... காங்கிரஸை விட ஆம் ஆத்மிக்கு அதிக இடங்கள்: NewsX-Polstrat கணிப்பு பஞ்சாப்பில் தொங்கு சட்டசபைதான்... காங்கிரஸை விட ஆம் ஆத்மிக்கு அதிக இடங்கள்: NewsX-Polstrat கணிப்பு

பண்டாரி சமூகம்

பண்டாரி சமூகம்

இந்த நிலையில் தேர்தலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சமூகமான பண்டாரி சமூக மக்களை கவர்ந்து இழுக்க முயற்சி செய்து வரும் நிலையில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர் அரசியல் கட்சியினர். கோவாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பண்டாரி சமூகத்தின் பாரம்பரிய தொழிலாக கள் இறக்கும் தொழிலும், விவசாயமும் மற்றும் பல தோட்டங்களில் வேலை செய்வதும் ஆகும். ரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் உட்பட கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கன் பெல்ட் முழுவதும் பண்டாரி சமூகத்தினர் பரவியுள்ளனர்.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவாவின் மக்கள் தொகை 14.59 லட்சமாக இருந்தது.

அரசியல் முக்கியத்துவர்

அரசியல் முக்கியத்துவர்

அதில் 66.08 சதவீதம் இந்துக்கள், 25.10 சதவீதம் கிறிஸ்தவர்கள், 3.66 சதவீதம் முஸ்லிம்கள், மீதமுள்ளவர்கள் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள். பண்டாரிகளின் மக்கள் தொகை குறித்து முறையான கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை. 2 லட்சம் என்று அரசு கூறுவது சரியல்ல தற்போது இந்த எண்ணிக்கை 5.29 லட்சமாக இருக்க வேண்டும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன, இது மாநிலத்தின் மக்கள்தொகையில் குறைந்தது 30 சதவீதமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில சட்டமன்றத்தில் பண்டாரி சமூகம் பிரதிநிதித்துவம் பெற்ற நிலையில், கோவாவில் இதுவரை ஒரே ஒரு முதல்வர் மட்டுமே அச்சமூகத்தின் சார்பில் இருந்துள்ளார். பண்டாரி சமூகத்தைச் சேர்ந்த ரவி நாயக் முன்பு காங்கிரஸில் இருந்து இப்போது பாஜகவில் இருக்கிறார் அவர் மட்டுமே முதல்வராக இருந்தவர். தற்போது 40 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் பண்டாரி சமூகத்தைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சி

இந்த நிலையில்தான் கோவா சட்டமன்ற தேர்தலில் தனது முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி அமித் பாலேகரை அறிவித்துள்ளது வழக்கறிஞர் அரசியல்வாதி என பன் முகங்களைக் கொண்ட அமித் , பண்டாரி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இதுவரை பண்டாரி சமூகத்திற்கு அரசியல் முக்கியத்துவம் தராத நிலையில் அந்த அநீதியை சரிசெய்யும் வகையில் ஆம் ஆத்மி கட்சி பண்டாரி சமூக வேட்பாளர் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பு அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

யாருக்கு ஆதரவு

யாருக்கு ஆதரவு

சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு அதிக அளவு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என பண்டாரி சமாஜ் அமைப்பு கூறியுள்ளது. அதே நேரத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் சமூக மக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதிகளவில் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தருவது முதல்வர் முகமாக பண்டாரி சமூகத்தைச் சேர்ந்த ஒருமுறை முன்னிறுத்தலாமா என பாஜக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

English summary
As the Goa assembly elections approach, various political parties are making a concerted effort to members of the bhandari community, promising to support their reservation and field a chief ministerial candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X