மோடியை பிடிக்கும்.. மோடிக்கு தான் என்னை பிடிக்காது… ராகுல் சொல்கிறார்
Recommended Video

புனே: அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் உரையாடிய ராகுல்காந்தி, சிறு வயதில் இருந்தே பல வன்முறை சம்பவங்களை பார்த்துள்ளதாகவும், வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தனக்கு மோடியை பிடிக்கும் என கூறியுள்ள ராகுல் காந்தி , அவருக்குத் தான் தன்னை பிடிக்காது என்றும் பதிலளித்தார். பணமதிப்பிழப்பு ஒரு மோசமான நடவடிக்கை என்பதை எந்த ஒரு பொருளாதார நிபுணரும் ஒப்புக்கொள்வார் என்று கூறிய அவர், அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உண்மையை ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொள்வதாகவும், அனுபவத்தில் இருந்தே தமது துணிச்சல் பிறப்பதாகவும் அவர் கூறினார். பொய்களை நம்பி பொய்களை சொல்லிக் கொண்டு திரிந்தால் அச்சம்தான் ஏற்படும் என்றும் ராகுல்காந்தி பேசினார்.
5 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படும் என்றும், அதை எப்படி செயல்படுத்துவது என்பது வரை ஆலோசித்திருப்பதாகவும் கூறிய ராகுல் காந்தி, வெற்று அறிவிப்புகளை எப்பொழுதும் கொடுப்பதில்லை என்றும் கூறினார்.
பாலக்கோட் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய பெருமை இந்திய விமாப்படையையே சாரும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், அமேதி தொகுதியில் வரும் 10-ம் தேதி ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் வரும் 11-ம் தேதி சோனியா காந்தியும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications