பழி வாங்கும் அரசியல் வேண்டாம்.. உங்களுக்கே ஆபத்தாகிவிடும்: ஆம் ஆத்மிக்கு காங். வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பழிவாங்கும் வகையில் வழக்குகள் தொடரும் முயற்சிகளை டெல்லி ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டால் அது அந்த கட்சிக்குத்தான் ஆபத்தாக முடியும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின்போது தெரு விளக்குகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீதும், கிருஷ்ணா- கோதாவரி படுகையில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணையின் விலையை முகேஷ் அம்பானி மற்றும் முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, அதற்கு முன்னர் இதே பதவியை வகித்த முரளி தியோரா ஆகியோர் கைகோர்த்துக்கொண்டு உயர்த்தியதாக முந்தைய ஆம் ஆத்மி அரசு குற்றம் சுமத்தியது.

Politics of revenge will backfire: Cong to Aap

இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்கும்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டதும், இதையடுத்து அவரது அரசுக்கு அளித்துவந்த ஆதரவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெற்றதால் அந்த ஆட்சி 49 நாட்களில் பதவி விலக நேரிட்டது.

தற்போது டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமையப்போவதை அடுத்து ஷீலா தீட்சித், முகேஷ் அம்பானி, வீரப்ப மொய்லி ஆகியோர் மீது மீண்டும் வழக்கு தொடரப்படுமா? என்ற கேள்விக்கு நேற்று பதில் அளித்த துணை முதல்வராகப் போகிற மணிஷ் சிசோடியா ஆம், நிச்சயமாக என்று தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பழி வாங்கும் அரசியல் உங்களுக்கே ஆபத்தாக திரும்பி விடும் எனவும் எச்சரித்துள்ளது.

டெல்லியின் முதல்வராக பதவி ஏற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இன்று ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, கேஜ்ரிவால் இனி தனது சிந்தனையை நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் செலுத்த வேண்டும்.

அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை வாக்களித்த மக்கள் பழி வாங்கி விடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+