டெல்லியில் தேர்தல் நடைபெற்றால் ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மை பெறும்: கருத்துக் கணிப்பு
டெல்லி: டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றால் ஆம் ஆத்மி கட்சிதான் பெரும்பான்மையைப் பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக ஆம் ஆத்மி வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆம் ஆத்மிக்கே பெரும்பான்மை
டெல்லியில் சிவோட்டர் நிறுவனம் 1038 பேரிடம் இது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியது. இக்கருத்துக் கணிப்பில் 43% பேர் ஆம் ஆத்மி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளனர்.

பாஜகவுக்கு ஆதரவு குறைவு
பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று 37% பேர் கூறியுள்ளனர்.

தேர்தல் நடத்த வேண்டும்
அத்துடன் டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதை டெல்லிவாசிகள் பெரும்பான்மையோர் விரும்பவில்லை. புதியதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று 90% பேர் கூறியுள்ளனர்.

ஆம் ஆத்மி- காங். கூட்டணி அரசு
ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைய 39% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதர கட்சிகள் கூட்டணி அமைய 32% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கிரண்பேடிக்கு அமோகம்
பாரதிய ஜனதா கட்சியில் ஹர்ஷவர்தனுக்குத்தான் தொடர்ந்தும் அதிக பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 34.8% பேர் அவர் முதல்வராக ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதே நேரத்தில் பாஜகவில் கிரண்பேடி இணைந்தால் அவர் முதல்வராவதற்கு 65% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கெஜ்ரிவால்தான் பெஸ்ட்
மேலும் சிறந்த முதல்வராக யார் இருப்பார் என்ற கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 34.4% பேரும், ஹர்ஷவர்த்தனுக்கு 17.1% பேரும்தான் ஆதரவு அளித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications