ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

குர்கான்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறுமா அல்லது 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றுமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹரியானா மாநிலத்தில், நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. ஹரியானா அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து 3ஆவது முறை ஆட்சியை பிடிக்க பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன.

haryana assembly election 2024 haryana election 2024 2024 2024

மாநிலம் முழுவதும் தேர்தல் நடைபெறும் 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹரியானா சட்டசபை தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம் - பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.

அனைத்து தொகுதிகளையும் சேர்த்து 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். 462 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

ஹரியானா முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள் மற்றும் 467 மூன்றாம் பாலின வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடந்தது.

ஹரியானா மாநிலம் முழுவதும் மொத்தம் 29,462 போலீசார், 21,196 ஊர்க்காவல் படையினர் மற்றும் 10,403 சிறப்பு காவல் அதிகாரிகள் (எஸ்பிஓ) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். குடிமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் கடுமையான கண்காணிப்பு பராமரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று மாலை இரு மாநிலங்களுக்குமான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

2019 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 90 இடங்களில் 40 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஜேஜேபி மற்றும் ஏழு சுயேச்சை எம்எல்ஏக்களுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் பாஜக ஆட்சி அமைத்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜேஜேபியின் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

மனோகர் லால் கட்டார் இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். பின்னர் ஜேஜேபி கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன் பிறகு சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார் பாஜகவின் நயாப் சிங் சைனி. விவசாயிகள், பாஜக அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டங்கள் ஆகியவை ஹரியானாவில் பாஜகவுக்கு எதிராகச் செயல்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ஹரியானா சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி, 36.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேவாட் தொகுதியில் அதிகபட்சமாக 42.64% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+