டெல்லியில் தமிழக பொறுப்பு ஆளுநருடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு !
டெல்லியில் தமிழக பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
டெல்லி: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை மத்திய இணைய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா நேற்று முன்தினண் நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை நேற்று ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிக்கப்பட்டது. இதனிடையே இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்துவரும் வித்யாசாகர் ராவை பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications