ஏழைகள் மிகப் பெரிய கனவு காண வேண்டும்: ராகுல் காந்தி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவுக்கு உள்கட்டமைப்பு அவசியம் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. அத்துடன் உள்கட்டமைப்பை யார் உருவாக்குகிறார்களோ அவர்களுக்கு உணவும் போதுமானதாக இருக்க வேண்டும். நாங்கள் அதை செய்கிறோம்.
நாட்டின் ஏழைகள் மிகப் பெரிய கனவு காண வேண்டும். அன்றாடக் கூலிகளாக இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளும் ஒருநாள் விமானியாக வலம் வர வேண்டும் என்று கனவு காண வேண்டும். ஏழைகளின் கனவுதான் நாட்டை வளப்படுத்தும்.
இந்த உலகிலேயே மிகப் பெரும் கனவை நீங்கள் காண வேண்டும். இந்த நாட்டில் ஏழைகளின் நிலத்தை எளிதாக பறித்துவிடக் கூடிய நிலைமை இருந்தது. இதைத்தான் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா மூலம் தடுத்திருக்கிறோம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அன்றாட ஊதியம் பெறுவோருக்கு இலவசமாக மருந்துகள் வழங்கி வருகிறோம். இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டம், உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஆகியவற்றை கொண்டுவர முடியாது என்று எதிர்க்கட்சியினர் சொன்னார்கள். ஆனால் நாங்கள் சாதித்துக் காட்டியிருக்கிறோம் என்றார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications