புல்வாமா தாக்குதலுக்கு பின் 'சூப்பர் கேபினட்' ஆலோசனைக் கூட்டத்தை கூட்டிய மோடி- டெல்லியில் பரபரப்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் சூப்பர் கேபினட் மீட்டிங் எனப்படும் அதிமுக்கிய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளனர். 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாகல்கோட் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்படுவதற்கு முன்னதாகவும் இதேபோல சூப்பர் கேபினட் மீட்டிங்கை நடத்தி இருந்தார் பிரதமர் மோடி.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என பிரதமர் மோடி உத்தரவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் இன்று சூப்பர் கேபினட் கூட்டம் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாலகோட் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. அப்போது இதேபோல சூப்பர் கேபினட் மீட்டிங்கை பிரதமர் மோடி கூட்டி இருந்தார். தற்போது ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் சூப்பர் கேபினட் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வழக்கமான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் சூப்பர் கேபினட் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் முப்படை தளபதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள், எடுக்கப்பட்ட முடிவுகளை பிரதமர் மோடி விவரிக்கிறார் என்கின்றன ஊடக செய்திகள்.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications