ரசகுல்லாவுக்கு 150வது ஹேப்பி பர்த்டே.. மே.வங்க அரசு தந்த ஸ்பெஷல் பரிசு!
ரசகுல்லா கண்டுபிடிக்கப்பட்டு 150 வருடங்கள் ஆனதைத் தொடர்ந்து சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா : ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தை பிறப்பிடமாக கொண்ட இனிப்பு ரசகுல்லா. நாடு முழுவதும் இதன் சுவைக்கு பிரியர்கள் அதிகம். இந்த இனிப்பை கொல்கத்தாவின் பக்பசாரைச் சேர்ந்த நோபின் சந்திரதாஸ் என்பர் கடந்த 1868ம் ஆண்டு கண்டுபிடித்தார்.

ரசகுல்லாவிற்கு ஒடிசாவும், மேற்கு வங்காளமும் உரிமை கோரியது. பின்னர் சட்டரீதியாக இந்தப் போராட்டத்தில் மேற்கு வங்காளம் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. பக்பசாரில் நடைபெற்ற ரசகுல்லா திருவிழாவில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அம்மாநில அமைச்சர் பிர்ஹத் ஹக்கிம், நோபின் சந்திரதாசின் பேரன் திமான் தாஸ், கொல்கத்தா தபால் நிலைய அதிகாரி சாருகேஷி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications