குடியரசு தின அணிவகுப்பு.. பிரலே ஏவுகணையை காட்சிப்படுத்தும் பாதுகாப்புத்துறை.. என்ன சிறப்புகள்?
குடியரசு தினத்தின்று டெல்லி கடமை பாதையில் நடக்கவுள்ள அணிவகுப்பில் பாதுகாப்புத்துறை சார்பாக இந்தியா ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் பிரலே ஏவுகணை காட்சிப்படுத்தப்படவுள்ளது. அதன் சிறப்புகள் மற்றும் திறன்களை குறித்து பார்க்கலாம்.
நாட்டின் 76வது குடியரசு தினம் தலைநகர் டெல்லி நாளை விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. ஏற்கனவே குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டு கடமை பாதையில் நடக்கவுள்ள அணிவகுப்பில் இந்தியாவின் பாதுகாப்பு படையின் பலத்தை காட்டும் வகையில் பல்வேறு வகையான ஆயுத அணிவகுப்பு நடக்கும்.

இந்த முறை அந்த அணிவகுப்பில் பிரலே ஏவுகணை இடம்பெறவுள்ளது. குடியரசு தின ஊர்வலத்தில் காட்சிப்படுத்தப்படும் இந்த ஏவுகனை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும். இராணுவம் மற்றும் விமானப்படைக்காக வடிவமைக்கப்பட்ட பிரலே ஏவுகணை, இந்தியாவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை.
பிரலே ஏவுகணையை பொறுத்தவரை 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று துல்லியமாக தாக்கக் கூடியது. அதேபோல் 500 முதல் 1,000 கிலோ வரையிலான எரிபொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது. மொபைல் லாஞ்சரில் இருந்து கூட ஏவ முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த வகையான ஏவுகணை, தாக்க வரும் ஏவுகணையை இடை மறித்து தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நடுவானில் குறிப்பிட்ட தூரத்தை எட்டியவுடன் தனது பாதையை மாற்றியமைக்கும் திறனையும் இந்த ஏவுகணை கொண்டுள்ளது. ஏர்கனவே பிரமோஸ் மற்றும் பிரஹார் ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கும் நிலையில், பிரலே ஏவுகணை இந்தியாவுக்கு கூடுதல் வலிமையை கொண்டு வந்துள்ளது. 2015ஆம் ஆண்டு பிரலே ஏவுகணைக்கான திட்டம் உருவாக்கப்பட்டு, சுமார் 6 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்தது.
பின்னர் 2021ஆம் ஆண்டு 2 நாட்களில் 2 முறை தொடர் பரிசோதனை மேற்கொண்டு வெற்றி பெற்றபின், தற்போது காட்சிப்படுத்தப்படவுள்ளது. இம்முறை பிரலே ஏவுகணையை பார்க்கவே மக்கள் அதிகளவில் ஆர்வமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லி கடமை பாதையில் நடக்கவுள்ள அணிவகுப்பில் 31 வாகனங்கள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications