கிரிமினல் எம்.பி., எம்எல்ஏக்களை பாதுகாக்கும் அவசர சட்டம்: மத்திய அமைச்சர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
டெல்லி: கிரிமினல் எம்.பி., எம்எல்ஏ,க்களைப் பாதுகாக்க வகை செய்யும் அவசர சட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.
கிரிமினல் எம்.பி. எம்.எல்.ஏக்கள் பதவியில் நீடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்க மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றி அமைச்சரவை ஒப்புதலுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சியிலேயே இந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த அவசர சட்டத்தை அமல்படுத்தினால் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் குறைந்து பெரும் இழப்பை சந்திக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களான அனில் சாஸ்திரி, மிலிந்த் தியோரா ஆகியோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அவசர சட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரணாப் முகர்ஜியிடம் பாஜக தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனை நடத்த வருமாறு மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து இது தொடர்பாக விளக்கமும் அளித்திருக்கின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications