அப்படி நடந்தால் ட்விட்டரை விட்டே விலகுகிறேன்.. பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை கடப்பது சாத்தியமே இல்லை. ஒருவேளை கடந்தால் நான் ட்விட்டரை விட்டே விலகுகிறேன் என அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.
வரும் 2021ம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கத்திற்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும்.
மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்காக அரசியல் நிபுணத்துவ வேலைகளை செய்து வருகிறார் பிரசாந்த் கிஷோர். இவரது ஐபேக் நிறுவனம் தான் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அரசியல் நிபுணத்துவ பணிகளை செய்து வருகிறது.

அமித்ஷா
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் இருந்த இடத்திற்கு பாஜக இப்போது வளர்ந்துள்ளது. ஆளும் மம்தா பானர்ஜிக்கு பாஜக கடும் சவாலாக உள்ளது. இந்த முறை திரணாமுல் காங்கிரஸ் கட்சியான பாஜகாவா என்ற போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் எப்படியும் வென்றே ஆக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக பணியாற்றி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் வேலைகளை மம்தாவும் பிரசாந்த கிஷோர் திட்டப்படி செய்து வருகிறார்.

பாஜகவுக்கு சவால்
தினமும் போராட்டம், சண்டை என்று பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் மோதல் மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை கடப்பது சாத்தியமே இல்லை. ஒருவேளை கடந்தால் நான் ட்விட்டரை விட்டே விலகுகிறேன் என அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

சாத்தியமில்லை
இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில். இந்த ட்விட்டை சேமித்து வையுங்கள், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை கடப்பது சாத்தியமே இல்லை. ஒரு வேளை கடந்தால் நிச்சயமாக நான் ட்விட்டரை விட்டே விலகுகிறேன். எனினும் பாஜக மேற்கு வங்க தேர்தலில் இரட்டை இலக்கத்தை கடக்க கடுமையாக போராடும் என்றார்.

மாற்றிய பாஜக
இதனிடையே மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 295 தொகுதியில் 182 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், இடதுசாரிகள் 26 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வென்றன. ஆனால் வெறும் 3 இடங்களில் வென்ற பாஜக அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 16 இடங்களில் வென்றது. 22 இடங்களில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வென்றது. காங்கிரஸ் இரண்டு இடத்தில் வென்றது. இடதுசாரிகள் ஒரு இடத்தில் ட வெற்றி பெறவில்லை. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு











Click it and Unblock the Notifications