ம.பி-இல் இதை எதிர்பார்க்கல.. சவுஹான் vs கமல்நாத்.. சிறந்த முதல்வர் ரேஸில் முந்துவது யார்! ட்விஸ்ட்
இந்தூர்: மத்தியப் பிரதேசத்திற்கு இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே எந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் மக்களிடையே செல்வாக்கு பெற்று இருக்கிறார் என்பது குறித்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதில் மத்தியப் பிரதேசத்தில் இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கே கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. அங்கே ஒரே கட்டமாக வரும் நவ. 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக எப்போதும் வலிமையாகவே இருக்கும். மற்றொரு புறம் காங்கிரஸும் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.
இதில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்றே பெரும்பாலான சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று ஆதரவு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருந்தாலும் காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஏபிபி-சி வோட்டர் இணைந்து புதிய சர்வே நடத்தியுள்ளது. அதில் சில ஷாக் முடிவுகள் தெரிய வந்துள்ளது. பொதுவாக இதுவரை வந்த சர்வேக்களில் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்ட நிலையில், இதில் பாஜக முதல்வர் சவுஹானுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அவருக்கும் கமல்நாத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த சர்வே-இல் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் 43 சதவீதத்துடன் முன்னிலையில் இருக்கிறார். அவருக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்திற்கு 42 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தொடர்ந்து பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 10 சதவீத மக்களும் காங்கிரஸின் திக்விஜய் சிங் 2 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கடைசியாக நடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும் பாஜக 109 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் அங்கே ஆட்சியை அமைத்த போதிலும், கமல்நாத் அரசு 15 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அப்போது சிந்தியா கலகம் செய்ததில் மொத்தம் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமானார்கள். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, மீண்டும் பாஜகவின் சவுஹான் முதல்வர் ஆனார்.












Click it and Unblock the Notifications