குழந்தைகளுக்கு நல்லது.. கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படிங்க.. ஆளுநர் தமிழிசை சொல்றதை பாருங்க
ஐதராபாத்: கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் மனநலம் மற்றும் உடல் நலனை உறுதி செய்ய ராமாயணம் போன்ற இதிகாசங்களை படிக்க வேண்டும் என்று புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
ஆளுநர் மட்டும் இன்றி பிரபலமான மகப்பேறு மருத்துவராக அறியப்படும் தமிழிசையின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் கவனம் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரரஜன் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிப்பதை பார்த்து இருக்கிறோம். குறிப்பாக தமிழகத்தில் கர்ப்பணி பெண்கள் கம்ப ராமாயணத்தின் உள்ள சுந்தரகாண்டத்தை படிக்க வேண்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கர்ப்ப காலத்தில் சுந்தர காண்டம் படிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செய்வதும் உள்ளது. யோகா செய்வதன் மூலம் கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தை என இருவரின் உடல் மற்றும் மன நலனைக் கவனித்து இறுதியில் சுக பிரவசத்திற்கு உதவிகரமாக இருக்கும். பேறு காலத்தில் ஏற்படும் சில சிக்கல்களை அறிவியல் பூர்வமான அணுகுமுறை கவனம் செலுத்துகிறது" என்றார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில், ராஷ்டிர சேவிகா சமிதியின் அறிவுசார் பிரிவு இணை தலைவர் லீனா கஹானே பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜிஜாபாய் ஜியின் 350 வது நினைவு தின அனுசரிப்பு நாளில், "கர்பா சன்ஸ்கார்" திட்டத்தை அறிமுகப்படுத்தியது பராட்டுக்கு உரியது. ராஜ்மாதா என்று குறிப்பிடப்படும் ஜிஜாபாய், மராட்டியப் பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜின் தாயார் ஆவார்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications