விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பச்சைப் புடவையில் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த்!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மண் சோறு சாப்பிட்ட விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் மண்சோறு சாப்பிட்டார்.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று 29வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டம் நடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளின்றி நாடு செழிக்காது
அப்போது விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் மண்சோறு சாப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் இன்றி நாடு செழிக்க முடியாது என்றார்.

எடப்பாடி இதுவரை சந்திக்கவில்லை
டெல்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் இதுவரை நேரில் சந்திக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

சாலைகள் போன்று நதிகளையும்..
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதாக கூறி பிரேமலதா, நீர்நிலைகளை தூர்வார இதுவே சரியான தருணம் என்றும் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்தது போன்று தேசிய நதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பச்சை நிறப்புடவையில்..
மேலும் தேமுதிக எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் பிரேமலதா தெரிவித்தார். விவசாயிகளின் அடையாள நிறமான பச்சை நிற புடவையில் பிரேமலதா விஜயகாந்த் போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications