Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனாதிபதியின் சபரிமலை பயணத்தால் சர்ச்சை.. ஐயப்பன் சிலை படத்தை பகிர்ந்ததால் அதிர்ச்சி! உடனடியாக நீக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நேற்று சபரிமலைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருமுடி கட்டி 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இந்த நிலையில் அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சபரிமலை ஐயப்பன் மூலவர் சிலை புகைப்படத்தை வெளியிட்டது கடும் எதிர்ப்பை பெற்றது. இதை அடுத்து மூலவர் படத்தை நீக்கி உள்ளது ஜனாதிபதி மாளிகை.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இருமுடி கட்டி, 18 புனித படிகளேறி ஐயப்பனை நேரில் தரிசித்தார். இதன்மூலம், சபரிமலையில் தரிசனம் செய்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை தரிசனத்திற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்காக திரவுபதி முர்மு அக்டோபர் 21ஆம் தேதி மாலை டெல்லியில் இருந்து தனியார் விமானத்தில் திருவனந்தபுரம் வந்தார்.

Droupadi Murmu Sabarimala Controversy

திரௌபதி முர்மு

விமான நிலையத்தில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் அவருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின் ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த திரவுபதி முர்மு, நேற்று காலை 9.35 மணியளவில் விமானப்படை ஹெலிகாப்டரில் சபரிமலை நோக்கி புறப்பட்டார். நிலக்கல்லில் இறங்கிய அவர், அங்கிருந்து வாகனத்தில் பம்பை சென்றடைந்தார். பம்பை கணபதி கோயிலில் வழிபாடு செய்த பின்னர், இருமுடி கட்டும் மரபின்படி வழிபாடு செய்து, பம்பையில் இருந்து ஜீப் மூலம் சந்நிதானம் நோக்கி பயணித்தார்.

சபரிமலை கோவில்

சந்நிதானம் சென்றதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் குடியரசுத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் திரவுபதி முர்மு, தமது பாதுகாப்பு குழுவுடன் 18 புனித படிகளையும் ஏறி, ஐயப்பன் சந்நிதியில் தரிசனம் செய்தார். மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தி, சந்தனப் பிரசாதத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கினார்.

கோவில் சர்ச்சை

அதன் பின் மாளிகைப் புரத்தம்மன் கோயிலில் வழிபாடு செய்த அவர், மீண்டும் பம்பை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் திரும்பினார். திரவுபதி முர்முவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களால் பக்தர்களின் அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அவர் தரிசனம் முடித்த பின் மட்டுமே பக்தர்கள் சபரிமலையில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

புகைப்பட சர்ச்சை

சபரிமலையில் மாதாந்திர பூஜைகள் முடிவடைந்துள்ளதால், இன்று இரவு நடை சாத்தப்பட்டு, மண்டல பூஜை தொடங்கும் நவம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவர் திரௌபதி சபரிமலை பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் வளாகத்தில் செல்போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலை ஐயப்பனின் மூலவர் சிலையை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பக்தர்கள் எதிர்ப்பு

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த போது அவருடன் வந்த புகைப்பட கலைஞர்கள் மூலவருடன் சேர்த்து புகைப்படம் எடுத்தனர். மேலும் அதனை குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் ஐயப்பன் கோவிலில் மூலவர் சிலையை புகைப்படம் எடுக்க தடை இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ்பக்கத்தில் மூலவர் சிலையை பதிவிட்டது எப்படி என கண்டனம் எழுந்தது. இந்தியா முழுவதும் இது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அந்த புகைப்படங்களை நீக்கி உள்ளது குடியரசு தலைவர் மாளிகை. இந்த நிலையில் இது தெரியாமல் நிகழ்ந்த தவறு எனவும் இதனை சர்ச்சை ஆக்க வேண்டாம் என ஒரு தரப்பும், குடியரசுத் தலைவருக்கு ஒரு நியாயம் சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயமா? என மற்றொரு தரப்பும் கேள்வி எழுப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+