விசாகப்பட்டினம் கடலில் போர் கப்பல்கள் கம்பீர அணிவகுப்பு: பிரணாப் முகர்ஜி, மோடி பார்வையிட்டனர்
விசாகப்பட்டினம்: சர்வதேச கடற்படை விழாவை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் 70 போர்க் கப்பல்கள் வரிசை வரியாக அணிவகுத்து நின்றதை குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜியும், பிரதமர் நரேந்திரமோடியும் இன்று பார்வையிட்டனர். அவர்களுக்கு முப்படை வீரர்களும் மரியாதை அளித்தனர்.
ஆந்திர மாநில விசாகப் பட்டினத்தில் 'ஐ.எப்.ஆர்.2016' என்ற பெயரில் சர்வதேச கடற்படை விழா 4 நாள் நடக்கிறது. ஆளுநர் நரசிம்மன் நேற்று விழாவை தொடங்கி வைத்தார்.
இரண்டாவது நாளான இன்று கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. மேலும் நடுக்கடலில் போர்க் கப்பல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாகூர், முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு 70 போர்க் கப்பல்கள் 6 வரிசையாக அணிவகுத்து நின்றன.பிரணாப்முகர்ஜியும், நரேந்திரமோடியும் ஐ.என்.எஸ். சுமத்ரா என்ற கப்பலில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டனர். அவர்களுக்கு முப்படை வீரர்களும் மரியாதை அளித்தனர். பின்னர் நடுக்கடலில் நடத்த முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை அவர்கள் பார்வையிட்டனர்.
விழா நடைபெறும் 3 நாட்களும் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஹைதராபாத்தில் தங்கி இருப்பார் என கூறப்படுகிறது.
7ந்தேதி நகர கவாத் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம்தேதி போர்க்கப்பல்கள் பாசறை திரும்புகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications