சாய்னா நெய்வால், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்
டெல்லி: பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திருபாய் அம்பானி, சாய்னா நெய்வால், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விபூஷன் , பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தின்போது 112 பேருக்கு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் 5 பேருக்கு பத்மவிபூஷன் விருதும், 8 பேருக்கு பத்மபூஷன் விருதும், 43 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் தொழில் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த திருபாய் அம்பானி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், பிரபல நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி,ஆகியோருக்கு பத்மவிபூசன் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்.

திருபாய் அம்பானி
மறைந்த திருபாய் அம்பானிக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதினை திருபாய் அம்பானி சார்பில் கோகிலா அம்பானி பெற்றுக் கொண்டார்.

சாய்னா நெய்வால்
சிஏஜியின் முன்னாள் தலைவர் வினோத் ராய், பாட்மிட்டன் வீராங்களை சாய்னா நெய்வால், நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட 8 பேருக்கு பத்ம பூசன் விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

மயில்சாமி அண்ணாதுரை
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அஜய் பால் சிங், திரைப்பட இயக்குனர் மதூர் பண்டார்கரு, இசைக்கலைஞர் பண்டிட் துளசிதாஸ் பார்க்கரு, மற்றும் மருத்துவ நிபுணர் பிரவீண் சந்திராவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மயில்சாமி அண்ணாதுரை
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அஜய் பால் சிங், திரைப்பட இயக்குனர் மதூர் பண்டார்கரு, இசைக்கலைஞர் பண்டிட் துளசிதாஸ் பார்க்கரு, மற்றும் மருத்துவ நிபுணர் பிரவீண் சந்திராவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அஜய் தேவ்கான்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், அஜாய்குமார் தத்தா, டாக்டர் அல்லா கோபால கிருஷண கோகலே, ஓவியர் கலால் லக்மா கவுடு, கண்சிகிச்சை நிபுணர் மகிபதி ஜோஷி, தாமல் கண்டலை சீனிவாசன், அறுவை சிகிச்சை நிபுணர் ரவிகாந்த் ஆகியோருக்கு பத்ம விருதுகளை பிரனாப் முகர்ஜி வழங்கினார்.

தீபிகா குமாரி
வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சிவ்நாராயணன் குரீல், ஸ்ரீநரேஷ் சந்தர் லாலு, இலக்கிய துறையில் சிறந்த சேவை ஆற்றிய மாலிக், கிருஷ்ணமணி, மகேஷ் சந்திர மேத்தா ஆகியோருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மஸ்ரீ வருதுகளை வழங்கினார்.

ரஜினிக்கு அடுத்த மாதம்
நடிகர் ரஜினிகாந்த், நடிகை பிரியங்கா சோப்ரா, டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா உள்பட எஞ்சிய 56 பேருக்கு, அடுத்த மாதம் நடக்கும் விழாவின் போது பத்ம விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications