குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பதி வருகை.. ஏழுமலையான் தரிசனம்
ஹைதராபாத்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமையன்று திருப்பதி ஏழுமலையான் கோயில், அலமேலு மங்காபுரம் பத்மாவதி சுவாமி ஆலயத்திலும் சுவாமி தரிசனம் செய்தார். குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு திருப்பதி விமான நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அரசு மரபுப்படி ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்திற்கு செவ்வாய்கிழமை வந்தடைந்தார். திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலை இங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் நரசிம்மன் ஆகியோரும் அவருடன் சென்றார்.

பத்மாவதி தாயார் தரிசனம்
காலையில் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவில், மலையடிவாரமன அலிபிரியில் உள்ள கபிலதீர்த்தம் சிவன் (கபிலேஸ்வரர்) கோவிலிலும் தரிசனம் செய்தார்.

ஏழுமலையான் தரிசனம்
பிற்பகலில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அருகில் உள்ள லட்சுமிவராஹ சாமி கோயிலையும் அவர் தரிசித்தார்.

பாரம்பரிய வரவேற்பு
குடியரசுத்தலைவருக்கு திருப்பதி- திருமலா தேவஸ்தானத்தின் சார்பில் பாரம்பரிய சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. வேத பாராயணம் ஒலிக்க ஏழுமலையான் சன்னிதானத்துக்கு பூசாரிகள் அவரை அழைத்துச் என்றனர்.

திருப்பதி லட்டு
தரிசனத்துக்கு பின்னர் புனித பட்டு சால்வை, லட்டு பிரசாதம், ஏழுமலையான் படம், தீர்த்தம் ஆகியவற்றை அளித்தனர்.

தீவிர பாதுகாப்பு
குடியரசுத்தலைவரின் திருப்பதி வருகையையொட்டி நேற்று மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் வாகனங்களும் பழைய செக் போஸ்ட் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications