அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கினார் பிரணாப் !
டெல்லி: மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கினார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 42 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பா.ஜனதா 11 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி 5 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. அம்மாநிலத்தின் முதல்வராக நபம்துகி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரசில் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக ஒரு பிரிவினர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாரதிய.ஜனதா மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனால் காங்கிரஸ் அதிர்ப்தி எம்எல்ஏக்கள் பாஜகவோடு கைகோர்த்து முதல்வருக்கு எதிராக போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை இட்டா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தினர். அதிருப்தி அணியைச் சேர்ந்த துணை சபாநாயகர் நூர் தாங்டாக் சபையை நடத்தினார். இதில் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக கலிகோபால் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், முதல்வர் நபம்துகி பதவி விலக மறுத்ததால் ஆளுநர் கோதி பிரசாத்துக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.
மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு பிரணாப் உடனே ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக விளக்கும் அளிக்குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கம் கேட்டார். இதனை அடுத்து ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து விளக்கம் அளித்தார் ராஜ்நாத் சிங்.
இதையடுத்து மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனிடையே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications