மணிப்பூரில் கேள்விக்குறியான இயல்பு நிலை! குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு
இம்பால்: மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்னும் இயல்பு நிலை திரும்பாததால், அடுத்த 6 மாத காலத்திற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

முன்னாள் முதலமைச்சர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மெய்தி சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்களின் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் பதவி விலகியிருந்தார்.
ஆளும் என்டிஏ கூட்டணியில் உள்ள மெய்தி மற்றும் நாகா எம்எல்ஏக்கள் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் நிறுவ முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சிகளுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 356(3) பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் ஆட்சி ஆளுநரின் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது பொதுவாக ஆறு மாதங்கள் நீடிக்கும். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் புதுப்பிக்கப்பட்டு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
பின்னணி என்ன?
மணிப்பூரில் 53% அளவுக்கு மெய்தி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது தவிர குக்கி, நாகா உள்ளிட்ட பல சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பழங்குடியினராவார்கள். மெய்தி மக்கள் பழங்குடியினர் கிடையாது. மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு சிறப்பு உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மலைப்பகுதிகளில் மெய்தி உட்பட பழங்குடியினர் அல்லாத மக்களால் நிலங்களை வாங்க முடியாது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி மக்களின் வாக்குகளை கவர, பாஜக புதிய அறிவிப்பை வௌியிட்டிருந்தது. அதாவது மெய்தி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதுதான் அந்த வாக்குறுதி. இத குறித்து ஏற்கெனவே அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் சிலர் வலியுறுத்தி வந்திருந்தனர். அதற்கேற்ப பாஜகவும் தேர்தல் வாக்குறுதி அளித்ததால், தேர்தலில் பாஜக எளிதில் வென்றது.
இருப்பினும் வெற்றி பெற்ற பின்னரும் கூட இது குறித்து பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அம்மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மெய்தி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பது குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி எம்.வி. முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.
அப்புறம் என்ன? இந்த உத்தரவு வந்ததுதான் தாமதம், உடனே குக்கி, நாகா சமூக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்த, அதை மெய்தி இன மக்கள் சீர்குலைக்க வன்முறை வெடித்தது. குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்ணை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்த சென்றனர் மெய்தி ஆண்கள். இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது.
அமித் ஷா போய் பார்த்தாச்சு, இந்திய ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, அசாம் ரைபிள் என ஏராளமான வீரர்களை குவித்து பார்த்தாச்சு இன்னமும் அங்கு அமைதி திரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் மோடி இதுவரை அங்கு போகவில்லை. மணிப்பூரில் சுமார் 60,000 பேர் அகதிகளாக மாறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications