தங்கம் நகைகளுடன் மாமியாருடன் கிளம்பிய மருமகன்.. இப்ப அந்தம்மா என்ன சொல்றாங்க தெரியுமா? ஆடிப்போன உ.பி
கான்பூர்: உத்திரப் பிரதேசத்தில் மணப்பெண் குடும்பமும், மணமகன் குடும்பமும் உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த நிலையில், போலீசுக்கு சென்றார்கள்.. நடந்த சம்பவம் குறித்து புகாரும் தந்தார்கள்.. இந்த புகாரின்பேரில் போலீஸ் தரப்பினரும் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர்.. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களையும் பிடித்து விசாரித்துள்ளனர்.. இதனால் மீண்டும் இந்த சம்பவத்தில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் உள்ளது மனோகர்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ஜிதேந்திர குமார். இவருடைய செல்ல மகள் ஷிவானி.. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் வேலை பார்த்து வந்த ராகுல் என்பவரை தன்னுடைய மகளுக்கு பேசி முடித்திருந்தார் ஜிதேந்திர குமார்.. இதற்காக நிச்சயமும் செய்யப்பட்டிருந்தது.

கல்யாண ஏற்பாடுகள்
நேற்று முன்தினம் அதாவது ஏப்ரல் 16 திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு, அதற்கான அழைப்பிதழ்களும் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.. இரு வீட்டினரும் கல்யாண ஏற்பாடுகளில் மும்முரமாகி கொண்டிருந்தனர்.
இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு ஜிதேந்திராவின் மனைவி அனிதா, தன்னுடைய வருங்கால மருமகன் ராகுலுடன் ஓடிவிட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் மாமியார், மருமகனை தீவிரமாக தேடி வந்தனர். . இந்நிலையில், நேபாள எல்லையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணை
பிறகு அனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது மருமகனுடன் ஓடிப்போனதற்கான உண்மையான காரணத்தை, சொல்லி போலீசாரையே அதிர வைத்துள்ளார் அனிதா. "
"என்னுடைய கணவர் ஜிதேந்திரா காலையிலிருந்து நைட் வரை தண்ணி அடிப்பார்.. 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பார். இதுவரை என் கணவரால் ஒரு சொந்தவீடு கூட கட்ட முடியவில்லை.. தினமும் ரூ.1500 கேட்டு என்னை அடித்து துன்புறுத்தினார்.. இந்த நேரத்தில், என் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது நான் மருமகனுடன் பேசியதை கணவர் சந்தேகப்பட்டார்... என்னுடைய மகளும் என்னை கிண்டல் செய்தார்.
மருமகன் ராகுல்
என்னையும் மருமகனையும் தொடர்புபடுத்தி, என் மீது மோசமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி துன்புறுத்தினார்.. நான் எவ்வளவோ மறுத்தும் மீண்டும் மீண்டும் அதையே சொல்லி, "நீ உன் மருமகனுடன் ஓடிப்போ" என்றார்..
மருமகனுடன் ஓடிப்போக சொல்லி தினமும் சொல்லி கொண்டே இருந்தார்.. அவரது அந்த டார்ச்சர் தாங்க முடியாமல் விரக்தியில், அவர் சொன்னதையே செய்து காட்டினேன்.. இப்போது என் வாழ்க்கையில் யார் வந்தாலும், மருமகன் ராகுலுடனேயே இருப்பேன். எங்களை தயவுசெய்து தனியாக விட்டுவிடுங்கள்.
தங்க நகைகள், பணம்
என் மகளுக்கு கல்யாணத்துக்காக வாங்கிய 3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பாத்திரங்களை நான் கொண்டு சென்றுவிட்டதாக என் மீது பொய்ப்புகார் தரப்பட்டுள்ளது.. வீட்டிலிருந்து வெளியேறும்போது என்னுடைய செல்போனையும், ரூ.200ம் மட்டுமே எடுத்து சென்றேன். அதுபோக, என் காலில் கொலுசும், கழுத்தில் தாலியும் மட்டுமே இருந்தது. மற்றபடி என்னுடைய கூறுவது போல் 3.5 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துச் செல்லவில்லை. அது பொய்.
நாங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை. ஆனால், நான் ராகுலுடன் செல்ல விரும்புகிறேன். அவருடன் வாழ விரும்புகிறேன். விவாகரத்து நடந்தாலும் இல்லாவிட்டாலும், நான் ராகுலுடன் மட்டுமே இருப்பேன்" என்று திடமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications