அருணாச்சல பிரதேசத்தில் அதிசயம்.. உலகின் நீளமான இருவழி சுரங்கப்பாதை! பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இட்டாநகர்: இரண்டு நாள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை திறந்து வைத்துள்ளார்.
நேற்று அசாம் மாநிலத்திற்கு சென்ற மோடி, இன்று காலை யுனெஸ்கோ புகழ் பெற்ற காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்திற்கு யானை சவாரி செய்தார். அங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், மான்கள், வித்தியாசமான பறவைகள் ஆகியவற்றை கண்டு வியந்த அவர், இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளால் இந்த இடம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

இதனையடுத்து ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் 'லச்சித் போர்புகானின்' 84 அடி உயர சிலையை திறந்து வைத்தார். பின்னர் போதாரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், காணொலி வாயிலாக புதிதாக கட்டப்பட்டுள்ள டின்சுகியா மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தார். மேலும் சிவசாகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்ற மோடி, அங்கு நடைபெற்ற 'விக்சித் பாரத்; விக்சித் வடகிழக்கு' நிகழ்ச்சியில், பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை திறந்து வைத்திருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கை இணைக்கும் இது 'சேலா' சுரங்கப்பாதை என்று அழைக்கப்படுகிறது.
இந்த சுரங்கப்பாதைக்கு மோடி கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். தற்போது இது ரூ. 825 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய பொறியியல் கட்டுமானத்தில் சாதனையாக கருதப்படும் இந்த சுரங்கப்பாதை, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாலிபாரா-சாரிடுவார்-தவாங் சாலையில் உள்ள சேலா கணவாயை தவாங்குடன் இணைக்கிறது.
முன்னதாக பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார், "கடந்த 5 ஆண்டுகளில் பாஜக என்ன செய்ததோ, அதை செய்ய காங்கிரஸ் 20 ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும். அவர்கள் வடகிழக்கு மாநிலங்களின் எல்லைகளை புறக்கணித்தனர். அங்குள்ள கிராமங்களை அவர்கள் கடைசி கிராமம் என்று அழைத்தனர். ஆனால் எங்களை பொறுத்த அளவில் இதுதான் முதல் கிராமம்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் ரூ.10,000 கோடி மதிப்பிலான விண்வெளி பயணம் தெடர்பாக UNNATI திட்டத்தையும் , மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கான ரூ.55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications