மோடியின் ’உள்ளே போ’ மொமெண்ட்! குழந்தையைப் பார்த்ததும் குஷி.. செக்யூரிட்டியை எதுக்காக முறைச்சாரு?
அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பதிவுக்கு வாக்களிக்க சென்ற பிரதமர் மோடி குழந்தை பார்த்ததும் மகிழ்ச்சியாகி அதனை தூக்கிப்போட்டு விளையாடி மகிழ்ந்தார். தொடர்ந்து பார்வையற்ற பெண்ணின் கையைப் பிடித்து பேசிய போது தடுக்க வந்த பாதுகாவலரை முறைத்தவாறு அங்கிருந்து போகச் செய்தார். இந்த காட்சிகளை பாஜகவினர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான லோக்சபா தேர்தலானது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இருகட்ட பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில் இன்று குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பத்து மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
பிரதமர் மோடி: அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் அகமதாபாத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிஷான் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் வெளியே வந்த பிரதமர் மோடியுடன் ஏராளமான பொதுமக்கள் ஆத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற பிரதமர் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
ஜனநாயக திருவிழா: பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருப்பதால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். செய்தியாளர்கள் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். ஜனநாயகத் திருவிழாவை பொதுமக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்,,திரளாக வந்து வாக்களித்து இந்த திருவிழாவை சிறப்பானதாக மாற்ற வேண்டும்”என கேட்டுக்கொண்டார்.
He is always the one amongst us & the one for us,
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 7, 2024
Our Hon PM Thiru @narendramodi avl. pic.twitter.com/aPpq89xUwz
குழந்தையுடன் உற்சாகம்: தொடர்ந்து தன்னை வரவேற்க வந்த மக்களை பார்த்து கையசைத்தவரே பிரதமர் மோடி சிறிது நேரம் நடந்து சென்றார். அப்போது குழந்தை ஒன்றை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த பிரதமர் அதனை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். அப்போது அந்த குழந்தையை மேலே தூக்கிப்போட்டு பிரதமர் நரேந்திர மோடி சில நிமிடங்கள் விளையாண்டதோடு அங்கு இருப்பவர்களை பார்த்து கையசைக்குமாறு கூறினார். இதனையடுத்து அங்கிருந்த பாஜகவினர் உற்சாகமாக முழக்கமிட்டனர்.
Baasha Bhai ft Narendrabhai ❤️🔥 @narendramodi
— இந்தா வாயின்கோ - Take That 👊 (மோடியின் குடும்பம்) (@indhavaainko) May 7, 2024
That “உள்ளே போ” moment😍 pic.twitter.com/3CdG05G2Oa
பாதுகாவலர்: தொடர்ந்து பார்வையாளர்களில் ஒரு பெண் பிரதமர் மோடியை பார்த்ததும் உணர்ச்சி மிகுதியால் பேசினார். இதை அடுத்து அந்த பெண்ணிடம் அருகே சென்ற பிரதமர் அந்த பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு கண் தெரியாது என அருகில் இருந்த பெண் கூறினார். இதை அடுத்து அவரிடம் மோடி பேசிக் கொண்டிருந்தபோது பாதுகாவலர் அந்த பெண்ணின் கையை தட்டி தட்டி விட முயன்றார். இதனால் லேசாக கோபம் அடைந்த பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வாறு செய்யக்கூடாது என அதட்டினார். இதையடுத்து அந்த பாதுகாவலர் அங்கிருந்து சென்றார். இப்போது இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பாஜகவினர் பகிர்ந்து பிரதமர் மோடியை புகழ்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications