BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. 4G சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
புதுடில்லி: வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.
இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என் நிறுவனத்தின் 4ஜி சேவையை ஒடிஸா மாநிலத்தில் உள்ள ஜார்சுகுடா மாவட்டத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன் மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டென்மார்க், ஸ்வீடன், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் பட்டியலில் இந்தியா 5 ஆவது நாடாக இணைந்துள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 97,500 தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவை பிஎஸ்என்எல் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 29 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 180 4ஜி வலைபின்னல் கோபுரங்களையும் மோடி திறந்துவைத்துள்ளார்.
இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் 120 கோடி வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் தொலைபேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக இன்று இந்தியா உருவெடுத்துள்ளது. இதனால், 5ஜி சேவையையும் மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ள 97500 செல்போன் கோபுரங்களில் 92,600க்கும் மேற்பட்ட கோபுரங்கள் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டது. இதனை எளிதாக 5ஜி சேவைக்கு மேம்படுத்தலாம். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட 4ஜி கோபுரங்களை நிறுவியுள்ளன. 14,180 4ஜி கோபுரங்கள் எண்ம பாரத நிதியின்கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாடு முழுவதும் 8 ஐஐடிக்களின் விரிவாக்கத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சம்பல்பூர் நகரில் ரூ. 273 கோடி செலவில் கட்டப்பட்ட 5 கிலோ மீட்டர் மேம்பாலத்தை திறந்துவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications