சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி.. குஜராத்தில் கோலாகலம்
காந்திநகர்: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். குஜராத்தின் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தார்.
இதன்பிறகு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு பேரணியிலும் மோடி பங்கேற்றார்.

நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், பிரிந்து கிடந்த மாகாணங்களை இணைத்து இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவருமான இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இன்று 145வது பிறந்த தினமாகும்.
இதையொட்டி, டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வெளியிட்ட ட்வீட்டில், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் முன்னோடிக்கு தாழ்மையான அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறினார்.
Prime Minister Narendra Modi pays tribute to Sardar Vallabhbhai Patel on his birth anniversary, at the Statue of Unity in Kevadia, Gujarat pic.twitter.com/Q0mR50XP46
— ANI (@ANI) October 31, 2020
பின்னர், கெவாடியாவில் உள்ள 600 அடி உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்தார். மலர்களை தூவியும், பாலால் சிலையின் கால் பகுதியில் ஊற்றியும் அவர் மரியாதை செய்தார்.
Kevadia: Prime Minister Narendra Modi witnesses 'Rashtriya Ekta Diwas' parade on the birth anniversary of Sardar Vallabhbhai Patel#Gujarat pic.twitter.com/8BJRrLrE8Z
— ANI (@ANI) October 31, 2020
பின்னர், தேசிய ஒருமைப்பாட்டு பேரணியிலும் மோடி பங்கேற்றார். கண்கவர் அணிவகுப்பில் மோடி தொப்பியுடன் காணப்பட்டார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications