காங்கிரஸ் மோசமான கட்சி; கொள்கையை மறந்து யாருடனும் கூட்டணி வைப்பாங்க... போட்டு விளாசிய மோடி!
குவஹாத்தி: காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாகிவிட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் எந்த கொள்கையும் இன்றி எந்த கட்சிகளுடனும் கைகோர்க்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, தொடர்ச்சியான வளர்ச்சி, அனைவரின் வளர்ச்சி. இது பாஜக ஆட்சியில் தொடரும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

அசாம் மாநில தேர்தல்
அசாம் மாநிலத்தில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அசாமில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்த முறை அசாமில் காலூன்ற வேண்டும் என காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இதனால் பாஜக-காங்கிரஸ் தலைவர்கள் அசாமில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் பலவீனமான கட்சி
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அசாமின் கரிம்கஞ்சில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார். பிரதமர் மோடி கூறியதாவது:- தேர்தல் நடக்கும் மாநிலங்களில் காங்கிரஸின் கூட்டணிகளை நாம் பார்த்தோமானால், காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாகிவிட்டது என்று தெரிய வரும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் எந்த கொள்கையும் இன்றி எந்த கட்சிகளுடனும் கைகோர்க்கும்.

அசாமை சேதப்படுத்திய காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் கேரளாவில் அதே கட்சிக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிடுகிறது. இவ்வாறு நிலையான சிந்தனை இல்லாத ஒரு கட்சியால், அசாமுக்கு ஒரு நிலையான அரசாங்கத்தை எப்படி வழங்க முடியும்? காங்கிரஸ் அரசும், அவற்றின் கொள்கைகளும் சமூக, கலாச்சார, புவியியல் மற்றும் அரசியல் ரீதியாக அசாமை சேதப்படுத்தின. 2016 ஆம் ஆண்டில், நான் இங்கு வந்தபோது, குவஹாத்தியில் இருந்து பராக் பள்ளத்தாக்கிற்கான பிரதேச ஆணையாளரை காங்கிரஸ் அரசு நடத்தியது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த அநீதியை தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி உடைத்துள்ளது.

பாஜக வளர்ச்சியை தக்க வைக்கும்
காங்கிரஸின் ஊழல் மற்றும் வாக்கு வங்கி அடிப்படையிலான ஆளுகை அசாமை இந்தியாவில் மிகவும் துண்டிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ஆக்கியது. இன்று அசாமில் வளர்ச்சி அலை, நம்பிக்கை அலை உள்ளது. அசாமில் தற்போது அமைதி பற்றிய நம்பிக்கை உள்ளது, செழிப்பு பற்றிய நம்பிக்கை உள்ளது. அசாமில் ஒரே ஒரு பிரச்சினை உள்ளது. வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, தொடர்ச்சியான வளர்ச்சி, அனைவரின் வளர்ச்சி. இது பாஜக ஆட்சியில் தொடரும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications