பிரசாரத்தை விட உயிர் தான் முக்கியம்.. சட்டென காரை நிறுத்திய பிரதமர் மோடி.. கடந்து சென்ற ஆம்புலன்ஸ்
சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்ற நிலையில் பிரசாரத்தை விட உயிர் தான் முக்கியம் என ஆம்புலன்சுக்கான வழி விடும் வகையில் தனது காரை நிறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியான நிலையில் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் உள்ளார்.
இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக வரும் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மும்முனை போட்டி
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர முயன்று வருகிறது. இந்த 2 கட்சிகளுக்கும் போட்டியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் தேர்தலில் களம் புகுந்துள்ளது. இதனால் இமாச்சலிலும் மும்முனை போட்டி நிலவுகிறது.

தலைவர்கள் பிரசாரம்
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இருவரும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், பிற மாநில பாஜக முதலமைச்சர்கள் என ஏராளமானவர்கள் இமாச்சல பிரதேசம் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்பட பிற தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆம்ஆத்மி சார்பில் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு
இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள சம்பி மற்றும் சுஜான்பூரில் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். இந்நிலையில் தான் சம்பி நகர் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டு சென்றார். சாலையின் இருபுறமும் அவரை தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

காரை நிறுத்திய மோடி
அப்போது திடீரென்று ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது காரை டிரைவரிடம் நிறுத்த கூறினார். டிரைவர் காரை நிறுத்தினார். இதையடுத்து பிரதமர் மோடியை பின்தொடர்ந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அந்த சாலையை ஆம்புலன்ஸ் வாகனம் எந்த இடையூறும் இன்றி வேகமாக கடந்து சென்றது. இதையடுத்து பிரதமர் மோடி பிரசாரத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் மீது விமர்சனம்
முன்னதாக கடந்த 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்தில் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். சுந்தர்நகர் மற்றும் சோலனில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியபோது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் காங்கிரஸ் கட்சி எதிரானது என குற்றம்சாட்டி இருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications