ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடம்- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!
டோக்கியா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அருங்காட்சியகத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடத்திலும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் உட்பட தங்களின் விரிவான உத்திகள் வகுத்தல் மற்றும் பங்களிப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

வர்த்தகம் & முதலீடு, அறிவியல் & தொழில்நுட்பம், உயர்கல்வி, மக்களிடையேயான உறவு போன்ற விரிவான பகுதிகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்தத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவின் தற்போதைய ஜி20 தலைமைத்துவமும் இந்த விவாதங்களில் இடம்பெற்றன. டெல்லியில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு சுனக்கை வரவேற்பதைப் பிரதமர் மோடி எதிர்நோக்கியுள்ளார்.

மேலும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்கள் இடையேயான முதல் சந்திப்பாக இது இருந்தது. தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 75வது ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். உத்திகள் வகுத்தலில், குறிப்பாக பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி, வர்த்தகம், மருந்துகள் உற்பத்தி, வேளாண்மை, பால்வளம் & கால்நடை பராமரிப்பு, உயிரி-எரிபொருள் & தூய்மை எரிசக்தி பற்றி ஆய்வுசெய்த அவர்கள், அதனை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் விவாதித்தனர். இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களின் உயர்நிலைக் கூட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். பிராந்திய வளர்ச்சி குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். பன்னாட்டு அமைப்புகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை, பன்னாட்டு அமைப்புகளில் நீடிக்கும் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் இவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆண்டு செப்டம்பரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்காக அதிபர் லூலாவை இந்தியாவில் வரவேற்க பிரதமர் எதிர்நோக்கி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications