கார்கில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய மோடி
டெல்லி: வெற்றி தினமான (விஜய் திவஸ்) இன்று கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது உயிர் நீத்த இந்திய வீரர்களை நினைவு கூறி மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி விஜய் திவஸாக அனுசரிக்கப்படுகிறது.
16வது ஆண்டு கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவத்தினர் கூடி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தலைமைத் தளபதிபதிகள் ஆகியோர், அமர் ஜவான் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் தெளலா கான் பகுதியில் மராத்தான் ஓட்டமும் நடைபெற்றது. தண்டி யாத்திரை நினைவிடம், அக்பர் ரோடு, ஜான்பாத் வழியாக சென்ற மராத்தான் ஜந்தர் மந்தரில் நிறைவு பெற்றது.
டிவிட்டரில் கொண்டாடிய மோடி
பிரதமர் மோடி கார்கில் தினத்தையொட்டி டிவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார். அதில், தங்களது நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த அனைத்து வீரர்களுக்கும், அவர்களின் தியாகத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். சல்யூட் செய்கிறேன்.
இந்திய படையினரின் தியாகத்தையும், வீரத்தையும் நமக்கு பறை சாற்றும் தினம்தான் கார்கில் திவஸ் என்றும் கூறியுள்ளார் மோடி.
கார்கில் போரில் இந்ியா 490 அதிகாரிகள், வீரர்கள், ஜவான்களை இழந்து என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications