பல வசதிகளுடன் இந்திய பிரதமருக்கு தனி விமானம் வாங்க முடிவு.. கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பிரதமருக்கு சொந்தமான தனி விமானம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் இந்திய குடியரசு தலைவர், மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோருக்கும் தனியாக விமானம் வாங்கப்படுகிறது.

இதற்கு அதிக அளவில் செலவு செய்யப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் மூவருக்கும் தனி விமானம் இருக்கிறது.

ஆனால் இப்போது பல வசதிகளுடன் புதிய விமானம் வாங்கப்பட உள்ளது. 2020 இல்லை 2019 இறுதிக்குள் இந்த விமானம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

பழசு

பழசு

இப்போதுவரை போயிங் -747 விமானம் இந்திய பிரதமர் மோடியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் நிறைய தொழில்நுட்பங்களை கொண்டது ஆனாலும் அமெரிக்க போன்ற தொலைதூர நாடுகளுக்கு ஸ்லேலும் போது இடையில் இறக்கி எரிபொருள் நிரப்ப வேண்டும்.

புதிது

புதிது

இதனால் தற்போது போயிங் 777-300 விமானம் வாங்கப்பட இருக்கிறது. மொத்தம் மூன்று விமானம் வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திடம் இந்த விமானம் ஒப்பந்தம் மூலம் வாங்கப்பட உள்ளது.

பணம்

பணம்

ஒரு விமானத்தின் விலை 4,300 கோடி வரை ஆகும் என்று கூறப்படுகிறது. மொத்தம் மூன்று விமானத்திற்கு 12,900 கோடி செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 1 வருடத்திற்கு பராமரிப்பிற்கு தனியாக செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

என்ன வசதி எல்லாம் இருக்கும்

என்ன வசதி எல்லாம் இருக்கும்

இதில் தொலைதூரம் செல்லும் போது பாதி வழியில் நிறுத்தி பெட்ரோல் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்த விமானத்தில் வைஃபை வசதியும் இருக்கும். மேலும் அணு ஆயுத தாக்குதலை தாங்கும் வகையில் இந்த விமானத்தில் பாதுகாப்பு உபகரணம் பொருத்த அமெரிக்காவிடம் உதவி கேட்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister, President of India will get new Planes by next year. Indian government planned to buy three Boeing 777-300 ERs.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற