எனக்கு பயம் இல்லை.. தடுப்பு சுவரை அசால்ட்டாக எகிறி குதித்த பிரியங்கா காந்தி.. வைரல் வீடியோ
தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தடுப்பு சுவரை தாண்டி குதித்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது .
Recommended Video
போபால்: தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தடுப்பு சுவரை தாண்டி குதித்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது .
காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லோக்சபா தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தற்போது பிற மாநிலங்களில், பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் டெல்லியில் பிரியங்கா காந்தி பெரிய சாலை பேரணியை நடத்தினார். நேற்று போபாலில் பிரச்சாரம் செய்தார்.
இதற்காக அங்கு நேரு மைதானத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பிரச்சாரத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இருந்தனர். பெரிய தடுப்பு கட்டைகள் போட்டு மக்களுக்கும் மேடைக்கும் இடையில் இடைவெளி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முதலில் தடுப்பு கட்டைகளுக்கு வெளியே நின்று கொண்டு பிரியங்கா காந்தி மக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அதன் பின் அங்கிருந்த பெண்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த பிரியங்கா காந்தி உடனே கூட்டத்தில் குதிக்க சென்றார்.
Here’s @priyankagandhi jumping over barricades to meet the gathered supporters.. Damn! This needs physical fitness n is tough to do👌🏻😊 pic.twitter.com/fHbm4avhWP
— Meenakshi.B (@minakshibhanja1) May 13, 2019
அங்கிருந்த தடுப்பு கட்டைகள் மேல் ஏறி, அதை தாண்டி உள்ளே குதித்தார். அவரின் பாதுகாவலர்களும் அவரை தொடர்ந்து உள்ளே குதித்தனர்,. உள்ளே சென்றவர் அங்கிருந்த பெண்களிடம் கை கொடுத்து பேசினார். நீண்ட நேரம் அங்கு எல்லா பெண்களிடமும் பிரியங்கா பேசினார்.
பிரியங்கா காந்தி சுறுசுறுப்பாக தடுப்பு சுவரை தாண்டி குதித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதை பலர் ஷேர் செய்து பிரியங்காவை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications