மோடி புகாருக்கு பிரியங்கா பதிலடி.. "அவர் என்ன ஜாதி என்று எனக்கு இதுவரை தெரியாது"
பிரதமர் மோடி சாதி என்னவென்று எனக்கு தெரியாது என்று பிரியங்கா கூறியுள்ளார்.
Recommended Video
அமேதி: "நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன், ஆனா காங்கிரஸ்தான் என்னை சாதி அரசியலுக்கு இழுக்கிறது" என்று பிரதமர் மோடி சொல்ல, "எனக்கு இப்போ வரைக்கும் மோடி எந்த ஜாதியை சேர்ந்தவர் என்றுகூட தெரியாது" என்று பிரியங்கா காந்தி அதற்கு பதிலடி தந்துள்ளார்.
வாரணாசி தொகுதியில் மீண்டும் மோடி போட்டியிடுகிறார். அதற்காக கன்னோஜ் நகரில் பிரதமர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியபோது, "பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி என் ஜாதிச் சான்றிதழை ஜெராக்ஸ் எடுத்து எல்லாருக்கும் தந்துட்டு வர்றார். ஆனால் நான் குஜராத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன்.

ஜாதி அரசியல்
இப்போது அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் கட்சியும் கூட என் ஜாதியை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். நான் இதுவரை ஜாதி அரசியல் செய்தது கிடையாது. ஆனால் நான் அவர்களிடம் கேட்பதெல்லாம், தயவு செய்து என்னை ஜாதி அரசியலுக்கு இழுக்காதீர்கள்" என்றார்.

சாதி தெரியாது
இந்நிலையில், அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்காவிடம் மோடி சொன்ன கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பிரியங்கா, "எனக்கு இப்போ வரைக்கும் மோடி எந்த ஜாதியை சேர்ந்தவர் என்றுகூட தெரியாது.

குழந்தைகள் நலன்
வெறும் பிரச்சினைகளை குறித்து கேள்வி எழுப்பித்தான் பிரச்சாரம் செய்துக்கிட்டு இருக்கோம். நாட்டில் வேலையின்மை, கல்வி, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் இப்படித்தான் குறிப்பிட்டு நாங்கள் பேசுகிறோமே தவிர, ஜாதியை சொல்லி எங்கேயுமே பேசவில்லை.

ஷூக்கள் தரலாமா?
பாஜகதான் தேசியவாதத்தை ஆயுதமாக எடுத்துப் பேசி வருகிறது. மக்கள் பிரச்சனையை காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. இதுக்கு பெயர் தேசியவாதம் இல்லை. ஸ்மிருதி இராணி, இந்த தொகுதி மக்களுக்கு ஷூக்களை வழங்கி அவமானப்படுத்துகிறார்.

முறையா?
இதுதான் தேர்தலில் போட்டியிடும் முறையா? எனக்கு 12 வயசாக இருக்கும்போதில் இருந்தே இங்க நான் வந்து கொண்டிருக்கிறேன். அமேதி மக்கள் சுயமரியாதை நிரம்பியவர்கள். யார்கிட்டயும் பிச்சை கேட்க மாட்டாங்க" என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications