உலகம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாராம் ரோகித் .. விசாரணை அறிக்கை!#rohitvemula
ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெர்முலா தற்கொலைக்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றும் அது சாதாரண விரக்தியால் நடந்தது என்றும் விசாரணை கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் ரோகித் வெர்முலா தலித் அல்ல என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கமிஷனின் இந்த அறிக்கையால் புதிய புயல் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ரோகித் வெமுலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் கொதிப்பையும் ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர்களான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஸ்மிருதி இராணி (அப்போது மனித வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்மிருதி) ஆகியோர்தான் ரோகித்தின் தற்கொலைக்குக் காரணம் என சர்ச்சை வெடித்தது. இதையடுத்து போராட்டங்களும் வெடித்தன.
இதையடுத்த முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள்:
- ரோகித் வெமுலா தலித் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல.
- தனக்குத் தானே தலித் என்று அறிவித்துக் கொண்டார் ரோகித்தின் தாயார் ராதிகா.
- அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக இவ்வாறு அறிவித்தார் ராதிகா.
- ஆவணங்களின்படி ராதிகா வடேரா என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் சொல்வது போல மாலா சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை.
- ரோகித் எந்த வகையிலும் பாரபட்சமாக நடத்தப்படவில்லை.
- பல்கலைக்கழக விடுதியிலிருந்து நீக்கப்பட்டதற்கும், அவரது தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை.
- உரிய காரணத்துடன்தான் ரோகித் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார்.
- தனிப்பட்ட விரக்திதான் ரோகித்தின் தற்கொலைக்கு முக்கியக் காரணம்.
- எம்எல்சி ராமச்சந்திர ராவ், அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இராணி ஆகியோர் இதற்குக் காரணம் இல்லை.
- தற்கொலைக் கடிதத்தில் உலக நடப்புகளே தனது முடிவுக்குக் காரணம் என்றுதான் எழுதியுள்ளார் ரோகித் வெமுலா.
- தற்கொலைக் கடிதத்தில் அவர் யாரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லை.
- இந்த உலகில் வாழப் பிடிக்காமல் அவர் தற்கொலை செய்திருப்பதாகவே தெரிகிறது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications