For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்புலன்சில் வராததால் சிகிக்சை மறுப்பு.. ஆக்ஸிஜன் கிடைக்காமல் துடிதுடித்து குஜராத் பேராசிரியர் பலி

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸின் டீன், பேராசிரியர் இந்திராணி பானர்ஜியை இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மாணவர்களும், சக ஆசிரியர்களும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். ஆனால் ஆம்புலன்சில் வரவில்லை என்று திரும்பி அனுப்பியதால் அவர் பரிதாமாக இறந்து போனார்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸின் டீன், பேராசிரியர் இந்திராணி பானர்ஜி வெள்ளிக்கிழமை மாலை உயிருக்கு போராடி உள்ளார்., மூச்சுத் திணறல் இருப்பதாக அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

அப்போது அவரது ஆக்ஸிஜன் செறிவு நிலை வெள்ளிக்கிழமை 90-92% ஆக இருந்தது. உயிருக்கு போராடிய இந்திராணியை வெள்ளிக்கிழமை அன்று காந்திநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​மருத்துவமனை நோயாளிகளால் ஹவுஸ்புல்லாகி நிரம்பியிருந்தது.

தவித்த மாணவர்கள்

தவித்த மாணவர்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். எனினும் தாமதிக்காமல் இந்திராணி பானர்ஜியை காந்திநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்கிருந்த ஊழியர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

மருத்துவமனை ஊழியர்கள்

மருத்துவமனை ஊழியர்கள்

இந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு இந்திராணி பானர்ஜிக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய வென்டிலேட்டர் அங்கு இல்லை. அதற்கு தட்டுப்பாடு உள்ளதாக அங்கிருந்து மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

ஆக்ஸிஜன் குறைந்தது

ஆக்ஸிஜன் குறைந்தது

இதனால் சனிக்கிழமையன்று, மாணவர்கள் தங்களது வாகனத்தில் பேராசிரியரை அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஏஎம்சி) கோவிட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவரை ஈ.எம்.ஆர்.ஐ 108 ஆம்புலன்சில் கொண்டு வரவிலை என்று அங்கிருந்தவர்கள் இந்திராணியை திருப்பிவிட்டனர். இதனால் மீண்டும் காந்திநகர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நேரத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு ஆபத்தான அளவாக 60% ஆக இருந்தது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இறுதியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்திராணி பானர்ஜிக்கு அதிகாலை 2 மணியளவில், காந்திநகர் மருத்துவமனை ஒரு பைபாப் ஆக்ஸிஜன் இயந்திரத்தை கொடுத்தது. ஆனால் சரியான நேரத்தில் கிடைக்காமல் தாமதாமாக கிடைத்ததால் பரிதாபமாக இந்திராணி முகர்ஜி உயிரிழந்தார். இதனால் வேதனை அடைந்த மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திராணியின் உடலை தகனம் செய்ய சோகத்துடன் கொண்டு சென்றனர்.

பெரும் சோகம்

பெரும் சோகம்

இந்திராணி பானர்ஜி இயற்பியலில் பி.எச்.டி மற்றும் மும்பை மற்றும் புனே பல்கலைக்கழகத்தின் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியவர் ஆவார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் வளர்ந்து வரும் விஞ்ஞானியாகவும் இருந்துள்ளார். ஆனால் ஆம்புலன்சில் வரவில்லை என்று திரும்பி அனுப்பியதால் அவர் பரிதாமாக இறந்து போயுள்ளார்.

English summary
Professor Indrani Banerjee, dean of School of Neurosciences at the Gujarat Central University died gasping for breath after a Covid hospital in Ahmedabad turned her away for not taking a designated ambulance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X