Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து தகராறு.. மகன் உள்பட 4 பேரை தீ வைத்து எரித்த முதியவர்.. ஓவர் டேங்கை எம்ப்டி செய்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

இடுக்கி: கேரளாவில் சொத்து பிரச்சினைக்காக மகன், மருமகள், 2 பேத்திகளை உயிரோடு எரித்துக் கொன்ற முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழை சீனிக்குழியை சேர்ந்தவர் ஹமீது (79). இவருடைய மகன் முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (45), பேத்திகள் மெஹ்ரின் (16), அஸ்னா (14). இவர்கள் 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். மெஹ்ரின் 11 ஆம் வகுப்பும் அஸ்னா 8 ஆம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் முகமது பைசலுக்கும் ஹமீதுக்கும் இடையே சொத்து தகராறு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்படும். இதனால் மகனை குடும்பத்துடன் கொல்வதற்கு ஹமீது திட்டமிட்டிருந்தார்.

அறை கதவு

அறை கதவு

அதன்பேரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு ஹமீதின் மகன், மருமகள், பேத்திகள் வழக்கம் போல் தூங்கச் சென்றனர். இதையடுத்து மறைந்திருந்த ஹமீது, அந்த அறையின் கதவை பூட்டினார். பின்னர் தான் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை அந்த அறைக்குள் ஊற்றி நெருப்பை பற்ற வைத்ததாக தெரிகிறது.

அறை முழுவதும் தீ

அறை முழுவதும் தீ

பின்னர் தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. தீ முகமது பைசல் உள்ளிட்டோர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையிலும் பரவியது. இதனால் 4 பேரும் இங்கும் அங்கும் அலறி அடித்தபடி ஓடினர். எப்படி தீ பிடித்தது என யோசிப்பதற்குள் அவர்கள் மீதும் தீ பிடித்துவிட்டது.

வெளிப்பக்கமாக பூட்டிய கதவுகள்

வெளிப்பக்கமாக பூட்டிய கதவுகள்

அறை கதவை திறக்க முயன்றனர். ஆனால் அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் 4 பேருடைய சப்தமும் ஓய்ந்தது. ஆனாலும் தொடர்ந்து அந்த அறையில் தீ எரிந்து கொண்டிருந்தது. இதனிடையே ஹமீது தன்னுடைய உறவினர்களுக்கு போன் போட்டு மகன், மருமகள், பேத்திகளை உயிரோடு தீ வைத்து கொன்று விட்டேன் என கூறியுள்ளார்.

பதறிய உறவினர்கள்

பதறிய உறவினர்கள்

இதனால் பதறிய உறவினர்கள் தாங்கள் வருவதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் என்பதால் அக்கம்பக்கத்தினருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி அவர்களை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்தனர்.

4 பேரும் உயிரிழப்பு

4 பேரும் உயிரிழப்பு

அறைக்குள் சென்ற போது 4 பேரும் தீயில் கருகியிருந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீ வைத்ததது குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்து விட்டால் அவர்கள் தீயை அணைப்பர் என்பதற்காக வீட்டிலிருந்த பக்கெட்டுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டாராம் ஹமீது.

டேங்க் காலி

டேங்க் காலி

அது போல் வீட்டின் ஓவர் டேங்கையும் காலி செய்துள்ளார். குடிநீர் இணைப்பு கூட ஹமீது துண்டித்துள்ளார். வீட்டிற்குள் தந்தையும் இளைய மகளும் கட்டி அணைத்தபடியே சடலமாக கிடந்த காட்சி பார்ப்போர் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது போல் தாயும் பெரிய மகளும் கட்டி அணைத்தபடியே உயிரை விட்டிருந்தனர். இதனால் 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பிரிப்பதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+